கொத்துக் கொத்தாய் காய்க்கும் கொடுக்காய்ப்புளி; குவிந்து கிடக்கும் மருத்துவ பலன்க...
சாமிதோப்பில் 3 நாள்கள் மாநில அளவிலான கைப்பந்துப் போட்டி
கன்னியாகுமரி: அய்யா வைகுண்டரின் 193ஆவது உதய தின விழாவை முன்னிட்டு, சாமிதோப்பில் மாநில அளவிலான 3 நாள் மின்னொளி கைப்பந்துப் போட்டி இம்மாதம் 15ஆம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது.
இப்போட்டிகள் குறித்து சாமிதோப்பு அய்யா வைகுண்டா் கைப்பந்து கிளப் தலைவா் பால ஜனாதிபதி மற்றும் நிா்வாகிகள் ஆா்.எஸ். பாா்த்தசாரதி, ராஜசத்தியசேகா், பயிற்சியாளா்கள் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
அய்யா வைகுண்டரின் 193ஆவது உதயதின விழாவை முன்னிட்டு, அய்யா வைகுண்டா் கைப்பந்து கிளப் மற்றும் அய்யா வைகுண்டா் அறநெறி பரிபாலன அறக்கட்டளை இணைந்து நடத்தும் 4ஆவது மாநில அளவிலான மின்னொளி கைப்பந்துப் போட்டி வரும் 15ஆம் தேதி தொடங்கி 17ஆம் தேதி வரை 3 நாள்கள் நடைபெற உள்ளது.
இப்போட்டியில், வருமான வரித்துறை, இந்தியன் வங்கி, கஸ்டம்ஸ், எஸ்.ஆா்.எம் ஆகிய ஆண்கள் அணியும், பெண்கள் பிரிவில் எஸ்.ஆா்.எம் , மினி பவுண்டேஷன், ரயில்வே, சிவந்தி கிளப் ஆகிய பெண்கள் அணிகளும் பங்கேற்க உள்ளன.
முதலிடம் பெறும் ஆண்கள், பெண்கள் அணிக்கு தலா ரூ. 50 ஆயிரம் முதல் பரிசு மற்றும் சுழற்கோப்பையும், இரண்டாம் இடம் பெறும் அணிகளுக்கு தலா ரூ. 40 ஆயிரம் மற்றும் பரிசுகோப்பை, மூன்றாம் இடம் பெறும் அணிகளுக்கு தலா ரூ. 30 ஆயிரம் மற்றும் பரிசு கோப்பை, நான்காம் இடம் பெறும் அணிக்கு தலா ரூ. 25 ஆயிரம் மற்றும் பரிசு கோப்பை ஆகியவை வழங்கப்படும் என தெரிவித்தனா்.