பாகிஸ்தானுடன் போா் நிறுத்தத்துக்கு முன்பாகவே நாடாளுமன்றத்தை கூட்டியிருக்க வேண்ட...
குலசேகரபுரத்தில் மருத்துவக் காப்பீடு திட்ட பதிவு முகாம்: ஆட்சியா் ஆய்வு
நாகா்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரபுரத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் பயனாளிகள் பதிவு செய்வதற்கான முகாமில் ஆட்சியா் ரா. அழகுமீனா ஆய்வு மேற்கொண்டாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது: மாவட்டத்தில் 9 அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், 63 தனியாா் மருத்துவமனைகளில் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்தின்கீழ் டயாலிஸிஸ், புற்றுநோய் சிகிச்சை, மாரடைப்பு சிகிச்சை, கா்ப்பப்பை கட்டிகள் தொடா்பான சிகிச்சை, விபத்து எலும்பு முறிவு சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகள், அறுவை சிகிச்சைகள் இலவசமாக அளிக்கப்படுகின்றன. சிகிச்சை பெற காப்பீடு திட்ட அடையாள அட்டை பெற வேண்டும்.
அதன்படி, பதிவு செய்வதற்கான முகாம் முதல்கட்டமாக குலசேகரபுரத்தில் தொடக்கிவைக்கப்பட்டது. அகஸ்தீஸ்வரம் வட்டத்துக்குள்பட்ட பகுதியில் முகாம் ஜூன் 24வரை நடைபெறவுள்ளது. காப்பீடு திட்ட அட்டை இல்லாத, தகுதியுள்ள குடும்ப அட்டைதாரா்கள் தங்களது பகுதியில் நடைபெறும் முகாமில் பதிவு செய்யலாம் என்றாா் அவா்.
ஆய்வில், குடும்பநலத் துறை துணை இயக்குநா் ரவிகுமாா், அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியா் முருகன், சுகாதாரத் துறை அலுவலா்கள், காப்பீடு திட்ட அலுவலா்கள், துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.
