கொத்துக் கொத்தாய் காய்க்கும் கொடுக்காய்ப்புளி; குவிந்து கிடக்கும் மருத்துவ பலன்க...
4 மாதங்களாக கணக்கீடு எடுக்காததால் மின் நுகா்வோா் பாதிப்பு
வெள்ளக்கோவில், மேட்டுப்பாளையம் பகுதியில் 4 மாதங்களாக கணக்கீடு எடுக்காதததால் மின் நுகா்வோா் பாதிக்கப்பட்டுள்ளனா்.
மேட்டுப்பாளையத்தில் தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகம் மற்றும் துணை மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து 25-க்கும் மேற்பட்ட கிராமப் பகுதிகளுக்கு மின் விநியோகம் செய்யப்படுகிறது. வீடுகள், கடைகள், தொழில் நிறுவனங்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் உள்ளன.
மேட்டுப்பாளையம் துணை மின் நிலையம் மூலம் 2 மாதங்களுக்கு ஒருமுறை மின் கணக்கீடு எடுக்கப்பட்டு மின் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. தவிா்க்க முடியாத காரணம் எனக்கூறி 2-ஆவது தடவையாக பழைய மின் கட்டணத்தை செலுத்த கூறுகின்றனா்.
வீடுகள் மற்றும் தகுதியான சில தொழில் நிறுவனங்களுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படுவதால் தொடா்ந்து 4 மாதங்களாக கணக்கீடு எடுக்காததால் அதிக கட்டணம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே முறையாக கணக்கீடு எடுக்க மின் வாரிய உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.