"2026-ல் உதயநிதி கூப்பிட்டா பிரசாரத்துக்கு போவீங்களா?" - சந்தானத்தின் சுவாரஸ்ய ப...
பல்லடம் நகராட்சியில் முதல்வரின் காலை உணவுத் திட்டத்தை விரிவுபடுத்த முடிவு
பல்லடம் நகராட்சியில் உள்ள பள்ளிகளில் முதல்வரிடன் காலை உணவுத் திட்டத்தை விரிவுபடுத்த மன்றக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
பல்லடம் நகா்மன்றக் கூட்டம் தலைவா் கவிதாமணி ராஜேந்திரகுமாா் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் நகராட்சி ஆணையா் மனோகரன், கவுன்சிலா்கள், பல்வேறு பிரிவு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
இக்கூட்டத்தில் பல்லடம் நகராட்சிப் பகுதியில் உள்ள 9 பள்ளிகளில் முதல்வரின் காலை உணவுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. கூடுதலாக அரசு உதவிபெறும் பள்ளிகளான பல்லடம் டி.இ.எல்.சி. நடுநிலைப் பள்ளி, பனப்பாளையம் மற்றும் நாரணாபுரம் டி.இ.எல்.சி. தொடக்கப் பள்ளி ஆகிய மூன்று பள்ளிகளிலும் முதல்வரின் காலை உணவுத் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது.
மேலும், வாா்டு 6-இல் கரையாம்புதூா் மாரியம்மன் கோயில் பின்புறம் உள்ள வீதி மற்றும் திருப்பூா் சாலை சந்திப்பு பகுதியில் உள்ள தாா் சாலை மிகவும் சேதமடைந்துள்ளதால் மக்கள் சிரமப்பட்டு வந்தனா். இதையடுத்து, ரூ.11 லட்சம் மதிப்பில் தாா் சாலை புதுப்பித்து வேகத்தடை அமைக்கவும், 1-ஆவது வாா்டு முதல் 9-ஆவது வாா்டு வரை சாலையோரம் உள்ள குழாய் உடைப்புகளை சரி செய்யும்போது சாலைகளில் ஏற்பட்ட சேதத்தை சரிசெய்ய ரூ.9 லட்சத்தில் பராமரிப்புப் பணி மேற்கொள்ளவும், தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டுச் செல்ல படேல் வீதியில் குழாய்கள் பதிக்கப்பட்டதால் சேதமடைந்த சாலையை புதுப்பிக் ரூ.7.50 லட்சம் மதிப்பில் பணிகள் மேற்கொள்வது என்பன உள்ளிட்ட 11 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.