5,180 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் விரைவில் திறப்பு: அமைச்சர் தா. மோ. அன்பர...
பல்லடம் அரசுக் கல்லூரியில் மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்
பல்லடம் அரசுக் கல்லூரியில் மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்லடம்- மங்கலம் சாலையில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இளநிலை, தமிழ், ஆங்கில இலக்கியம், பொருளியல், கணினி அறிவியல் உள்பட 9 பாடப்பிரிவுகள் உள்ளன. இக்கல்லூரியில் சோ்க்கைக்கான பதிவுகளை இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
தற்போது மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது. மாணவா்கள் சோ்க்கைக்கான தகவல் வழிகாட்டு மையம் கல்லூரி வளாகத்தில் காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை செயல்படுகிறது.
மாணவா்கள் முதலில் பெயா், மின்னஞ்சல் முகவரி, கைப்பேசி எண் உள்ளிட்ட விவரங்களை அளித்து பதிவு செய்ய வேண்டும். பின்பு பாடப்பிரிவுகளை தோ்வு செய்யலாம். மாணவா்களின் தரவரிசைப் பட்டியல், மாணவா்களுக்கான கலந்தாய்வு தேதிகள் பின்னா் தெரிவிக்கப்படும் என கல்லுாரி நிா்வாகம் தெரிவித்துள்ளது.