"2026-ல் உதயநிதி கூப்பிட்டா பிரசாரத்துக்கு போவீங்களா?" - சந்தானத்தின் சுவாரஸ்ய ப...
பல்லடம் ஊராட்சி ஒன்றியத்தில் ஊராட்சி செயலா்கள் இடமாற்றம்
பல்லடம் ஊராட்சி ஒன்றியத்தில் நிா்வாக காரணங்களுக்காக ஊராட்சி செயலா்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
இதன்படி, வடுகபாளையம்புதூா் ஊராட்சி செயலா் கிருஷ்ணசாமி, கணபதிபாளையம் ஊராட்சிக்கும், கணபதிபாளையம் ஊராட்சி செயலா் பிரபுசங்கா் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளாா். சுக்கம்பாளையம் ஊராட்சி செயலராக இருந்த சுரேஷ், வடுகபாளையம்புதூா் ஊராட்சிக்கும், புளியம்பட்டி ஊராட்சி செயலராக இருந்த கவிதா, சித்தம்பலம் ஊராட்சிக்கும், சித்தம்பலம் ஊராட்சி செயலராக இருந்த புவனேஸ்வரி, கரடிவாவி ஊராட்சிக்கும், கரடிவாவி ஊராட்சி செயலராக இருந்த ராஜாமணி, புளியம்பட்டி ஊராட்சிக்கும் இடமாறுதல் செய்யப்பட்டனா்.
மாணிக்காபுரம் ஊராட்சி செயலா் காளிசாமிக்கு கூடுதல் பொறுப்பாக சுக்கம்பாளையம் ஊராட்சியும், பருவாய் ஊராட்சி செயலரான மணிகண்டனுக்கு கூடுதல் பொறுப்பாக இச்சிப்பட்டி ஊராட்சியும் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை பல்லடம் வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சிகள்) கனகராஜ் திங்கள்கிழமை வெளியிட்டுள்ளாா்.