ஆபரேஷன் சிந்தூர்: அமெரிக்காவின் கருத்தை நிராகரித்த இந்தியா! என்ன நடக்கிறது?
ஒரே நாளில் 2வது முறையாக தங்கம் விலை குறைந்தது!
சென்னையில் ஒரே நாளில் தங்கம் விலை இரண்டு முறை அதிரடியாகக் குறைந்துள்ளது
சென்னையில் இன்று காலை வர்த்தகமாகியதும் ஒரு கிராம் தங்கம் விலை ரூ.8,880-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு சவரன் ரூ.71,040-க்கு விற்பனையானது. நேற்றைய விலையை விட இன்று காலையில் ஒரு கிராம் 165-க்கும், ஒரு சவரன் ரூ.1,320 குறைந்துள்ளது.
ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,360 குறைந்துள்ளது. காலையில் ரூ.1,320 குறைந்த தங்கம் விலை தற்போது மேலும் ரூ.1,040 குறைந்துள்ளது. சென்னையில் ஒரு சவரன் தங்கம் ரூ.70,000க்கும், ஒரு கிராம் ரூ.8,750க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த வாரம் ஒரே நாளில் 2 முறை உயர்ந்த தங்கம், வாரத்தின் முதல் நாளான இன்று இரண்டாவது முறையாக ஒரே நாளில் தங்கம் விலை குறைந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.