எனது வெற்றிக்குக் காரணம் என்னுடைய அம்மா; சச்சின் டெண்டுல்கர் அன்னையர் தின வாழ்த்து!
இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் அன்னையர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் வீரரான சச்சின் டெண்டுல்கர் அவரது அம்மா ரஜ்னி டெண்டுல்கருக்கு அன்னையர் தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க:கேப்டன் ரோஹித் சர்மாவை ஈடுசெய்யவே முடியாது: மைக்கேல் கிளார்க்
இது தொடர்பாக அவரது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: நான் தொடங்கும் அனைத்து விஷயங்களும் என்னுடைய அம்மாவின் பிரார்த்தனையுடனும், அவரது வலிமையுடனும் தொடங்கப்படுகிறது. ஒவ்வொருவருக்கும் அவர்களது அம்மா பக்கபலமாக இருப்பது போன்று என்னுடைய அம்மாவும் எனக்கு எப்போதும் ஊக்கம் அளிப்பவராக இருந்துள்ளார். நம்பமுடியாத அளவுக்கு குழந்தைகளுக்கு ஊக்கமளிக்கும் அம்மாக்கள் அனைவருக்கும் எனது அன்னையர் தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் எனப் பதிவிட்டுள்ளார்.
Everything I am started with her prayers and her strength. My Aai has always been my anchor, just like every mother is for her child.
— Sachin Tendulkar (@sachin_rt) May 11, 2025
Wishing all the incredible mothers a very Happy Mother’s Day!
#MothersDaypic.twitter.com/AUSnZC7G6L
இந்திய அணிக்காக பல்வேறு சாதனைகளை படைத்துள்ள சச்சின் டெண்டுல்கர், சர்வதேசப் போட்டிகளில் 34,357 ரன்கள் குவித்துள்ளார். கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான வீரராக அவர் இன்றும் நீடிக்கிறார்.
இந்திய அணிக்காக 463 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள சச்சின் டெண்டுல்கர் 18,426 ரன்கள் குவித்துள்ளார். 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 15,921 ரன்கள் எடுத்துள்ளார்.
அதிக ஆட்டநாயகன் விருதுகள், அதிக அரைசதங்கள், அதிக ஃபோர்கள் போன்ற அவரது கிரிக்கெட் சாதனைகள் இன்னும் யாராலும் முறியடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.