பிடித்தமானவர்களில் ஒருவர் விராட் கோலி.! புகழாரம் சூட்டிய லெப்டினன்ட் ஜெனரல்!
ரயிலைக் கவிழ்க்க சதி: வட மாநில நபர் கைது
அரக்கோணம், ஆவடி, திருவாலங்காடு ஆகிய பகுதிகளில் தண்டவாளங்களில் கற்களை வைத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு, ஆவடி மற்றும் அரக்கோணம் பகுதிகளில் அண்மையில் சிலர் தண்டவாளங்களில் கற்களை வைத்து ரயில்களை கவிழ்க்க சதி செய்திருந்தனர்.
இதுதொடர்பாக தமிழக போலீஸார் மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படையினர் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர்.
தி.நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள துணிக்கடையில் பயங்கர தீ விபத்து!
அப்போது எடுக்கப்பட்ட சிசிடிவி காட்சி ஆதாரங்களை வைத்து தெலங்கானா மாநிலம், காச்சிகுடாவில் ரயில்வே பாதுகாப்புப் படையினர் ஒரு நபரை கைது செய்தனர்.
உத்தரகண்ட் மாநிலம், ஹரிதுவாரை அடுத்த ஹரிப்பூர் காலன் அருகே கங்கை நதி ஓரத்தில் வசித்து வந்த ஓம்(50) என்ற அந்த நபரை தமிழ்நாடு அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்த ரயில்வே பாதுகாப்புப் படையினர் முடிவு செய்துள்ளனர்.
