செய்திகள் :

முத்தரப்பு தொடர் இறுதிப்போட்டி: இலங்கையை வீழ்த்தி இந்தியா அபாரம்!

post image

முத்தரப்பு ஒருநாள் தொடரின் இறுதிப்போட்டியில் இலங்கையை 97 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

இந்தியா, இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு ஒருநாள் தொடரின் இறுதிப்போட்டி இன்று (மே 11) கொழும்பில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் விளையாடின.

இதையும் படிக்க: தாயகம் திரும்பாத பஞ்சாப் கிங்ஸ் வெளிநாட்டு வீரர்கள்; ரிக்கி பாண்டிங் செய்தது என்ன?

சதம் விளாசிய ஸ்மிருதி மந்தனா

இரு அணிகளுக்கும் இடையிலான இந்த இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது. முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 342 ரன்கள் எடுத்தது.

இந்திய அணியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்மிருதி மந்தனா சதம் விளாசி அசத்தினார். அவர் 101 பந்துகளில் 116 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 15 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, ஹர்லின் தியோல் 47 ரன்கள், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 44 ரன்கள், ஹர்மன்பிரீத் கௌர் 41 ரன்கள் எடுத்தனர்.

இலங்கை தரப்பில் மல்கி மதாரா, திவ்மி விஹங்கா மற்றும் சுகந்திகா குமாரி தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். இனோகா ரணவீரா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினார்.

இந்தியா அபார வெற்றி

343 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிகப் பெரிய இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை அணி 48.2 ஓவர்களில் 245 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம், 97 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

இதையும் படிக்க: ஐபிஎல் மே மாதத்திலேயே நடத்தப்பட்டால்... எங்கு நடத்தப்படும் தெரியுமா?

இலங்கை அணியில் கேப்டன் சமாரி அத்தப்பத்து அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 66 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து ஸ்நே ராணா பந்துவீச்சில் போல்டானார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். அவரைத் தொடர்ந்து, நிலாக்‌ஷி டி சில்வா 48 ரன்களும், விஷ்மி குணரத்னே 36 ரன்களும் எடுத்தனர்.

இந்தியா தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய ஸ்நே ராணா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். அமன்ஜோத் கௌர் 3 விக்கெட்டுகளையும், ஸ்ரீ சரணி ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

அதிரடியாக விளையாடி சதம் விளாசிய ஸ்மிருதி மந்தனா ஆட்ட நாயகியாகவும், இந்த தொடர் முழுவதும் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய ஸ்நே ராணா தொடர் நாயகியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

பாகிஸ்தான் - வங்கதேசம் இடையேயான டி20 தொடர் நடைபெறுமா?

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவுவதால், வங்கதேசம் - பாகிஸ்தான் இடையேயான டி20 நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.வங்கதேச அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்... மேலும் பார்க்க

இந்திய டெஸ்ட் அணியில் சாய் சுதர்சனுக்கு வாய்ப்பு கிடைக்குமா?

இந்திய டெஸ்ட் அணியில் சாய் சுதர்ஷனுக்கு தொடக்க வீர்ராக களமிறங்க வாய்ப்பு கிடைக்குமா என ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.தமிழகத்தைச் சேர்ந்த சாய் சுதர்சன் (23) குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார... மேலும் பார்க்க

எனது வெற்றிக்குக் காரணம் என்னுடைய அம்மா; சச்சின் டெண்டுல்கர் அன்னையர் தின வாழ்த்து!

இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் அன்னையர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.இந்திய அணியின் முன்னாள் வீரரான சச்சின் டெண்டுல்கர் அவரது அம்மா ரஜ்னி டெண்டுல்கருக்கு அன்னையர் தின வாழ்த்துகளை த... மேலும் பார்க்க

கேப்டன் ரோஹித் சர்மாவை ஈடுசெய்யவே முடியாது: மைக்கேல் கிளார்க்

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதாக மே.7ஆம் தேதி அறிவித்தார். இது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கடைசியாக ரோஹித் சர்மா பிஜிடி தொடரில் விளையாடினார். 3-2 என... மேலும் பார்க்க

ஸ்மிருதி மந்தனா சதம்: இலங்கைக்கு 343 ரன்கள் இலக்கு!

முத்தரப்பு ஒருநாள் தொடரில் இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டி இன்று (மே 11) தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்தப் போட்டியில் இந்தியாவின் சார்பில் ஸ்ம... மேலும் பார்க்க

முத்தரப்பு தொடர் இறுதிப்போட்டி: இந்திய மகளிர் பேட்டிங்!

முத்தரப்பு ஒருநாள் தொடரில் இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டி இன்று (மே 11) தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இந்தியா, இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்... மேலும் பார்க்க