இந்திய ராணுவத்துக்கும், ஆயுத விஞ்ஞானிகளுக்கும் தலைவணங்குகிறேன்! - பிரதமர் மோடி
லோகேஷ் கனகராஜ் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு அப்டேட்!
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நாயகனாக நடிக்கவுள்ள படத்தின் பூஜை இன்று நடைபெற்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாநகரம் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ் கைதி, மாஸ்டர் என அடுத்தடுத்த வெற்றிப்படங்களைக் கொடுத்து தமிழின் முன்னணி இயக்குநரானார்.
தற்போது, நடிகர் ரஜினிகாந்த்தை வைத்து கூலி படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் பல நட்சத்திர நடிகர்கள் நடித்துள்ளதால் படம் பெரிய வணிக வெற்றியைப் பெறும் என்றே கணிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தைத் தொடர்ந்து கைதி - 2 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாகத் தெரிகிறது.
இதற்கிடையே, லோகேஷ் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. இவர் ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்குகிறாராம்.
இந்த நிலையில், இப்படத்திற்கான பூஜை இன்று சென்னையில் நடைபெற்றதாகவும் இப்படத்தை லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் மற்றும் பேசன் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிப்பதாகக் கூறப்படுகிறது. படத்தின் படப்பிடிப்பு அடுத்த வாரம் துவங்க உள்ளதாம்.
இதையும் படிக்க: மேடையிலேயே திடீரென மயங்கி விழுந்த நடிகர் விஷால்