சத்தீஸ்கரில் டிரெய்லர் மீது மினி லாரி மோதல்: 13 பேர் பலி, பலர் காயம்
ஸ்மிருதி மந்தனா சதம்: இலங்கைக்கு 343 ரன்கள் இலக்கு!
முத்தரப்பு ஒருநாள் தொடரில் இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டி இன்று (மே 11) தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
இந்தப் போட்டியில் இந்தியாவின் சார்பில் ஸ்மிருதி மந்தனா சதம் (116) அடித்து அசத்தினார்.
ஹர்லின் தியோல், ஹர்மன் ப்ரீத், ஜெமிமா 40க்கும் அதிகமான ரன்களை குவித்து அணியின் ஸ்கோரை அதிகரிக்க உதவினார்கள்.
இலங்கை சார்பில் டெவ்மி விஹங்கா, சுகந்திகா குமாரி தலா 2 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்கள்.
இறுதியில் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 342 ரன்கள் குவித்தது.
இந்திய மகளிரணியின் ஸ்கோர் கார்டு
பிரதிகா ராவல் - 30
ஸ்மிருதி மந்தனா - 116
ஹர்லின் தியோல் - 47
ஹர்மன்ப்ரீத் கௌர் - 41
ஜெமிமா ரோட்ரிகியூஸ் - 44
ரிச்சா கோஷ் - 8
அமன்ஜோத் கௌர் - 18
தீப்தி சர்மா - 20*
கிராந்தி கௌட் -0