பிடித்தமானவர்களில் ஒருவர் விராட் கோலி.! புகழாரம் சூட்டிய லெப்டினன்ட் ஜெனரல்!
கன்னி குருப்பெயர்ச்சி பலன்கள்: `பத்தில் குரு பதவிக்கு ஆபத்தா? - முழுப்பலன்கள் இதோ!
கன்னி - குருப்பெயர்ச்சி பலன்கள் 2025
1. நேர்வழியில் நடப்பவர் நீங்கள். உங்கள் ராசிக்கு 10-ம் இடத்தில் அமர்ந்து பலன் தரப்போகிறார் குருபகவான். `பத்தில் குரு பதவிக்கு ஆபத்தா’ என்ற கவலை வேண்டாம். வேலை பார்க்கும் இடத்தில், கவனத்துடனும் நிதானத்துடனும் நடந்துகொண்டால் போதும்.
2. எவருக்காகவும் ஜாமீன் கொடுக்க வேண்டாம். வங்கி லோன் தொடர்பாக எவருக்கும் பரிந்துரை கையொப்பம் போடவேண்டாம். வெளியிடங்களில், சமூக அமைப்புகளில் பதவிகள் தேடி வந்தால், யோசித்துச் செயல்படுவது நல்லது. கூடுமானவரை, தவிர்த்து விடுவது நல்லது.
3. வேலைப்பளு கூடும். ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளைப் பார்க்க வேண்டி வரும். அவ்வப்போது, தர்ம சங்கடமான சூழ்நிலைக்கு ஆளாவீர்கள். எந்த விஷயத்திலும் மற்றவர்களை நம்பாமல், நீங்களே நேரடியாகச் சென்று முடிப்பது நல்லது.

4. உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்துவார்கள். ஆகவே, பேச்சில் கவனம் தேவை. எவரிடமும் அதிகம் உரிமை எடுத்துக்கொள்ள வேண்டாம். முக்கிய கோப்புகளைக் கையாளும்போது அலட்சியம் வேண்டாம்.
5. ஒருசிலருக்குத் தோல்வி மனப்பான்மையால் மன இறுக்கம் உண்டாகும். தன்னம்பிக்கையோடு செயல்பட்டால், இதுபோன்ற நிலைகளைத் தவிர்க்கலாம். ஆன்மிக விஷயங்களில் நாட்டம் செலுத்துங்கள்; விரக்தியும் வேதனையும் விலகும்.
6. குருபகவான் உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டைப் பார்ப்பதால், உங்கள் பேச்சில் முதிர்ச்சி தெரியும். வரவேண்டிய பணம் வரும். குடும்பத்தில் நிம்மதியும் மகிழ்ச்சியும் உண்டு. எனினும் வீண் சந்தேகத்தைத் தவிர்த்துவிடுங்கள்.
7. குரு, சுக வீட்டைப் பார்ப்பதால் தாயாரின் வருத்தம் நீங்கும். அவரின் ஆரோக்கியம் மேம்படும். வீடு கட்ட வங்கிக் கடன் கிடைக்கும். சொந்தவீடு வாங்கி, புது வீட்டில் குடிபுகுவீர்கள். பழுதாகியிருந்த வாகனத்தை மாற்றுவீர்கள். தாய்மாமன் வகையில் மனக் கசப்புகள் நீங்கும். வீடு-மனை வாங்குவதும் விற்பதும் லாபம் தரும்.
8. குரு பகவான் 6-ம் வீட்டைப் பார்ப்பதால், பழைய கடனில் ஒரு பகுதியைத் தீர்க்க வழி பிறக்கும். வழக்குகள் உங்களுக்குச் சாதகமாகும். எனினும் பழைய ஆவணங்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பது அவசியம்.
9. வியாபாரத்தில் சிலர், கடையை விரிவுபடுத்த வாய்ப்பு உண்டாகும். சந்தை நிலவரங்களை அறிந்து கொள்முதல் செய்யவும். புதியவர்களின் தேவையற்ற கருத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம். கெமிக்கல், கமிஷன், எலெக்ட்ரிக்கல் மற்றும் துணி வகைகளால் லாபம் அடைவீர்கள். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். எதிர்பாராத லாபமும் கிடைக்கும்.

10. உத்தியோகத்தில் வேலைச்சுமை ஓரளவு இருக்கும். ஓரளவு சம்பள உயர்வு உண்டு. பணியில் கவனமின்மை, பொறுப்பற்ற தன்மையை விலக்கிவிடுங்கள். வீண் விமர்சனங்களும் வேண்டாம். கலைஞர்கள், விமர்சனங்களைத் தாண்டி முன்னேறுவீர்கள்.
11. ராணிப்பேட்டையிலிருந்து பொன்னை செல்லும் வழியில், சுமார் 22 கி.மீ தொலைவில் உள்ளது வள்ளிமலை. இது, மனதுக்குச் சிக்காத மந்திரமலை என்பார்கள். ஒருமுறை குடும்பத்துடன் இங்கு சென்று, அபிஷேகத்துக்குத் தேன் வாங்கிக்கொடுத்து, முருகனையும் வள்ளியம்மையையும் வழிபட்டு வாருங்கள்; விருப்பங்கள் யாவும் நிறைவேறும்!