பிடித்தமானவர்களில் ஒருவர் விராட் கோலி.! புகழாரம் சூட்டிய லெப்டினன்ட் ஜெனரல்!
கடகம் குருப்பெயர்ச்சி பலன்கள்: செயலில் நிதானம் அவசியம்; தூக்கம் கெடும் நிலை உருவாகும்!
கடகம்: குருப்பெயர்ச்சி பலன்கள் 2025
1. இதுவரை லாப ஸ்தானமாகிய 11-ம் இடத்தில் இருந்துகொண்டு, பல்வேறு வகைகளிலும் சாதகமான நிலையை உருவாக்கிக்கொடுத்தார் குருபகவான். இப்போது அவர் 12-ல் அமர்வதால், சொல்லிலும் செயலிலும் நிதானம் அவசியம். வீண் செலவுகளை அறவே தவிர்த்துவிடுங்கள். எவருக்கும் வாக்குறுதி கொடுக்க வேண்டாம்.
2. குடும்ப ரகசியங்களை வெளியே பகிர வேண்டாம். அதேபோல், அடுத்தவரின் குடும்ப விஷயங்களிலும் தலையிட வேண்டாம். சிற்சில தருணங்களில் சரியான பசி இருக்காது; தூக்கம் கெடும் நிலை உருவாகும். தியானம், யோகப் பயிற்சியில் ஈடுபடுங்கள். மனதை மலர்ச்சியாக வைத்துக்கொள்ளுங்கள்.
3. உங்களில் சிலர், புண்ணிய ஸ்தலங்களுக்குக் குடும்பத்துடன் சென்று வருவீர்கள். குலதெய்வக் கோயிலின் விழாக்களை, திருப்பணிகளை முன்னின்று நடத்துவீர்கள். மனதுக்குப் பிடித்தமான வீட்டுக்கு மாறுவீர்கள். புதிய மனை-நிலம் வாங்கும் முயற்சிகளில் இறங்குவீர்கள். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும்.

4. குருபகவான் உங்கள் ராசிக்கு 4-ம் இடத்தைப் பார்வை இடுகிறார். ஆகவே, தாயாரின் ஆரோக்கியம் சிறக்கும். தாய்வழிச் சொத்துக்கள் கிடைக்க வாய்ப்பு உண்டு. ஒருசிலர் வண்டி, வாகனங்கள் புதிதாக வாங்குவீர்கள்.
5. குரு பகவான் 6-ம் இடத்தைப் பார்ப்பதால், சிலருக்குக் கோர்ட் வழக்குகள் அலைச்சலை உண்டாக்கலாம். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய வழி கிடைக்கும். எனினும், எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம்.
6. பெரிய நோய் இருப்பது போன்ற பிரம்மை நீங்கும். உடல் ஆரோக்கியம் நிம்மதி தரும். எனினும் உணவு, உறக்கத்தில் அலட்சியம் கூடாது. சிலருக்கு வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும்.
7. குரு பகவான் 8-ம் இடத்தைப் பார்ப்பதால் பணவரவு உண்டு. ஷேர் மூலம் பணம் வரும். எனினும் சேமிக்க முடியாதபடி செலவுகளும் துரத்தும். ஆரோக்கியம் கூடும். வழக்குகள் சாதகமாகும். முன்கோபத்தைக் குறைத்துக்கொள்ளுங்கள்.
8. வியாபாரத்தில் தள்ளுபடி, சலுகைகளை அறிவித்துப் பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். வேலையாள்கள் தொடர்பான விஷயங்களில் அலட்சியம் வேண்டாம். கொடுக்கல் வாங்கலிலும் கவனம் தேவை.
9. சந்தை நிலவரத்தைத் தெரிந்து செயல்படுங்கள்.கூட்டுத் தொழிலில், பங்குதாரர்கள் பிரச்னை செய்யலாம். பொறுமையுடன் அவரை அணுகுங்கள். உணவு, டிராவல்ஸ், பப்ளிகேஷன், அழகு சாதனப் பொருள்களால் லாபம் அடைவீர்கள்.

10. உத்தியோகத்தில் விமர்சனங்கள், ஆதங்கம் உண்டு என்றாலும் அதிகாரிகளின் ஆதரவும் உற்சாகம் தரும். எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு சற்று தாமதமாகக் கிடைக்கும்.
11. திருநெல்வேலி, தாமிரபரணி ஆற்றுப் படுகையில் அமைந்துள்ளது குறுக்குத்துறை முருகன் கோயில். ஆற்றில் வெள்ளம் வரும்போதெல்லாம் தண்ணீருக்குள் மூழ்கிவிடும் இந்த முருகனின் கோயில், வெள்ளம் வடிந்ததும் மீண்டும் பொலிவோடு காட்சிதரும். செவ்வாய்க் கிழமை அல்லது கிருத்திகை நட்சத்திரத்தில், இந்தக் கோயிலுக்குச் சென்று சர்க்கரைப் பொங்கல் சமர்ப்பித்து வழிபடுங்கள்; தடைகள் நீங்கி வெற்றிகள் கிடைக்கும்.