சீன பொருள்கள் மீதான வரி 145 சதவீதத்திலிருந்து 30% ஆக குறைப்பு! - அமெரிக்கா
"இனி இந்தியா என்ன செய்யும் என்பது பாகிஸ்தானுக்கு தெரியும்..!" - Vice Admiral ஏ.என்.பிரமோத்
பாகிஸ்தான் நடத்திய எல்லை தாண்டிய தாக்குதலுக்கு, இந்திய ராணுவம் எப்படி பதிலடி கொடுத்தது என்று முப்படையையும் சேர்ந்த அதிகாரிகள் நேற்று விளக்கமளித்தனர்.
இதுகுறித்து கடற்படை வைஸ் அட்மிரல் ஏ.என்.பிரமோத் பேசியதாவது...
"கடந்த 22-ம் தேதி பஹல்காமில் நடந்த கோழைத்தனமான தாக்குதலுக்குப் பிறகு, இந்திய கடற்படையின் கேரியர் போர் குழு, மேற்பரப்புப் படைகள், நீர்மூழ்கிக் கப்பல்கள் முழு தயார் நிலையோடு கடலில் களமிறக்கப்பட்டன.

தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்பட்ட 96 மணி நேரத்திலேயே, நாம் கடலில் தாக்குதல் ஒத்திகையைப் பார்த்திருந்தோம்.
நமது படை வட அரபுக் கடலில் நின்று, கராச்சி உள்ளிட்ட பாகிஸ்தானில் உள்ள கடல் மற்றும் நில இலக்குகளைத் தாக்க முழு தயார் நிலையோடு இருந்தது.
இனி பாகிஸ்தான் எதாவது தாக்குதல் நடத்த விரும்பினால், இந்தியா என்ன செய்யும் என்று பாகிஸ்தானுக்குத் தெரியும்," என்று கூறினார்.