விழுப்புரத்தில் மிஸ் கூவாகம் போட்டி: திருநங்கைகள் பங்கேற்பு!
Virat Kohli : 'புன்னகையுடன் விடைபெறுகிறேன்!' - ஓய்வை அறிவித்த விராட் கோலி!
'விராட் கோலி ஓய்வு!'
விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற விரும்புவதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருந்த நிலையில், இப்போது அவரே ஓய்வை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்.

'நெகிழ்ச்சி பதிவு!'
விராட் கோலி வெளியிட்டிருக்கும் பதிவில், 'இந்திய அணிக்காக டெஸ்ட்டில் அந்த நீல நிறத் தொப்பியை அணிந்து 14 ஆண்டுகள் ஆகிவிட்டது. உண்மையாக சொல்லப்போனால் நான் இப்படியொரு பயணத்தை கற்பனை செய்து கூட பார்த்தது இல்லை. நான் நிறையவே சோதிக்கப்பட்டிருக்கிறேன், அதன் வழி நிறைய மேம்பட்டிருக்கிறேன். நிறைய கற்றிருக்கிறேன். இதையெல்லாம் என் வாழ்க்கை முழுமைக்கும் வைத்துக் கொள்வேன்.
வெள்ளை உடை அணிந்து ஆடுவதில் தனிப்பட்ட முறையில் ஒரு ஆழ்ந்த திருப்தி இருக்கிறது. கடினமான நீண்ட பயணத்துக்கு இடையே யாருடைய கண்ணிலும் சிக்காமல் இருக்கும் சின்னச்சின்ன நற் தருணங்கள் எப்போதும் என்னுடன் இருக்கும்.
நான் இப்போது டெஸ்ட்டிலிருந்து விலகுகிறேன். இது சுலபமான முடிவு அல்ல. ஆனால், இதுதான் சரியான முடிவு என நினைக்கிறேன். நான் இந்த ஆட்டத்துக்காக என்னுடைய எல்லாவற்றையும் கொடுத்திருக்கிறேன். பதிலுக்கு இந்த ஆட்டமும் நான் நம்பியதை விட நிறைய விஷயங்களை எனக்குக் கொடுத்திருக்கிறது. இதயம் நிறைந்த நன்றிகளுடன் விடைபெறுகிறேன். என்னுடை டெஸ்ட் கரியரை எப்போதுமே ஒரு சிறு புன்னகையுடன் திரும்பிப் பார்த்துக் கொள்வேன்.' எனக் கூறியிருக்கிறார்.