செய்திகள் :

Rohit Sharma : 'விடைபெறுகிறேன்; அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி!' - ஓய்வை அறிவித்த ரோஹித் சர்மா!

post image

'திடீர் ஓய்வு!'

டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா திடீரென அறிவித்திருக்கிறார்.

ரோஹித் சர்மா
ரோஹித் சர்மா - AUS v IND

'ரோஹித்தின் பதிவு!'

இதுசம்பந்தமாக ரோஹித் வெளியிட்டிருக்கும் பதிவில், 'எல்லோருக்கும் வணக்கம், டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறேன் எனும் செய்தியை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

இந்திய அணியை வெள்ளை உடையில் பிரதிநிதித்துவப்படுத்தியதற்காக பெருமைக் கொள்கிறேன். இத்தனை ஆண்டுகளாக நீங்கள் வழங்கிய அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி. இந்திய அணிக்காக தொடர்ந்து ஓடிஐ போட்டிகளில் ஆடுவேன் என்பதையும் தெரியப்படுத்திக் கொள்கிறேன்.' என ரோஹித் கூறியிருக்கிறார்.

ரோஹித் சர்மா
ரோஹித் சர்மா

ரோஹித் தலைமையில் இந்திய டெஸ்ட் அணி உள்ளூரில் நியூசிலாந்துக்கு எதிராக ஒயிட் வாஷ் ஆகியிருந்தது. ஆஸ்திரேலியாவில் பார்டர் கவாஸ்கர் தொடரை இழந்திருந்தது. இதனைத் தொடர்ந்தே ரோஹித்தின் ஓய்வு அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. கில் இந்திய அணியின் அடுத்த கேப்டனாக்கப்படலாம் என தகவல் வெளியாகியிருக்கிறது.

ரோஹித் சர்மாவின் திடீர் ஓய்வைப் பற்றிய உங்களின் கருத்துகளை கமெண்ட் செய்யுங்கள்.

Dhoni : 'ரிட்டையர் ஆகப்போறேன்னு நினைக்கிறாங்க, ஆனா...' - ஓய்வு பற்றி தோனி

சென்னை வெற்றி!கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி ஈடன் கார்டனில் நடந்திருந்தது. சென்னை அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருந்தது. போட்டிக்குப் பிறகு சென்னை... மேலும் பார்க்க

Playoffs : 'ஒரே இரு இடம்; மோதிக்கொள்ளும் 4 அணிகள்!' - ப்ளே ஆப்ஸூக்கு செல்லப்போகும் அணிகள் எவை?

நடப்பு ஐ.பி.எல் தொடரில் லீக் சுற்றுகள் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. மூன்று அணிகள் ப்ளே ஆப்ஸ் வாய்ப்பை முழுமையாக இழந்து 'E' மார்க் வாங்கி எலிமினேட் ஆகிவிட்டன. ஆனால், இன்னமும் எந்த அணியும் அந்த 'Q'... மேலும் பார்க்க

IPL 2025 : 'கோடிகளில் ஏலம்... நம்பிய அணிகள்; சொதப்பிய டாப் 10 வீரர்கள்!' - யார் யார் தெரியுமா?

'சொதப்பிய வீரர்கள்!'ப்ளே ஆஃப்’ஸ் ரேஸ் வேகமெடுத்திருக்கிறது. நடப்பு சீசனின் க்ளைமாக்ஸை நோக்கி வேகமாக நகர்ந்துகொண்டிருக்கிறோம். நிறைய இளம் வீரர்கள் அவர்களின் ஆட்டத்தின் வழி நம்மை ஆச்சர்யப்படுத்தியிருக்க... மேலும் பார்க்க

Urvil Patel : 'அதிரடி பேட்டர்; அசத்தல் கீப்பர்!'- சிஎஸ்கேவின் புதிய வீரர்; யார் இந்த உர்வில் படேல்?

'தேடுதல் வேட்டையில் சிஎஸ்கே!'நடப்பு ஐ.பி.எல் சீசனில் சென்னை அணி முதல் அணியாக ப்ளே ஆப்ஸ் வாய்ப்பை இழந்து வெளியேறிவிட்டது. ஆனாலும், சீசனுக்கு இடையே பல இளம் வீரர்களையும் ட்ரையல்ஸூக்கு அழைத்து அணியில் சேர... மேலும் பார்க்க

'சீசனின் ஆகச்சிறந்த பேட்டர்; சாய் சுதர்சனுக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்குமா?

'சீசனின் ஆகச்சிறந்த பேட்டர்!'நடப்பு ஐ.பி.எல் தொடரின் ஆகச்சிறந்த பேட்டராக உருவெடுத்து நிற்கிறார் தமிழக வீரர் சாய் சுதர்சன். ஆடியிருக்கும் 10 போட்டிகளில் 504 ரன்களை எடுத்திருக்கிறார். சாய் சுதர்சனின் சீ... மேலும் பார்க்க