பிளஸ் 2 தோ்வு முடிவுகள்: அதிகம் தேர்ச்சி பெற்ற முதல் 5 மாவட்டங்கள்!
தமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகளை சென்னை கோட்டூா்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகக் கூட்டரங்கில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வெள்ளிக்கிழமை வெளியிட்டார்.
இந்தாண்டும் மாணவிகள் முதலிடம் பிடித்தனர். மாணவிகள் 96.70 சதவிகிதமும், மாணவர்கள் 93.16 சதவிகிதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பிளஸ் 2 பொதுத் தோ்வு மாா்ச் 3-ஆம் தேதி தொடங்கி 25-ஆம் தேதி முடிவடைந்தது. தோ்வை 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 மாணவ, மாணவிகள் எழுதினா்.
தேர்வு எழுதியவர்களில் 95.03 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 94.56 சதவிகிதம் என்பது குறிப்பிடத்தக்கது.
இது மாணவர்களுக்கான மதிப்பீடு கிடையாது. தேர்வுக்கான மதிப்பீடு மட்டுமே: அன்பில் மகேஸ்
அதிகம் தேர்ச்சி சதவிகிதம் பெற்ற முதல் 5 மாவட்டங்கள்
மாநிலத்தில் அரியலூர் மாவட்டத்தில் 98.82 சதவிகிதம் பேரும், ஈரோடு மாவட்டத்தில் 97.98 சதவிகிதம் பேரும், திருப்பூர் மாவட்டத்தில் 97.53 சதவிகிதம் பேரும், கோயம்புத்தூர் மாவட்டத்தில் 97.48 சதவிகிதம் பேரும், கன்னியாகுமரி 97.01 சதவிதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அரசுப் பள்ளி மாணவர்களில் அதிகம் தேர்ச்சி பெற்ற முதல் 5 மாவட்டங்கள்
இதிலும் அரியலூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. அதாவது, அரியலூர் மாவட்டத்தில் 98.32 சதவிகிதம், ஈரோடு மாவட்டத்தில் 96.88 சதவிகிதம் பேரும், திருப்பூர் மாவட்டத்தில் 95.64 சதவிகிதம் பேரும், கன்னியாகுமரி 95.06 சதவிகிதம், கடலூர் மாவட்டத்தில் 94.99 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பாடவாரியான தேர்ச்சி சதவிகிதம்
அறிவியல் பாடப்பிரிவுகளில் 96.99 சதவிதம் பேரும், வணிகவியல் பாடப்பிரிவுகளில் 92.68 சதவிகிதம் பேரும், கலைப் பிரிவுகளில் 82.90 சதவிகிதம், தொழிற்பாடப் பிரிவுகளில் 84.22 சதவிகிதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாணவர்கள் தேர்வு முடிகளை https://tnresults.nic.in/ https://results.digilocker.gov.in/ என்ற இணையதள முகவரிகளில் பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.