தனியாா் சிற்றுந்துகளை கூடுதல் தொலைவுக்கு இயக்க அனுமதி: ஜூன் 15 முதல் அமல்
மாா்த்தாண்டத்தில் மறியல்: 20 பாமகவினா் கைது
மாா்த்தாண்டம் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள அணுகுசாலையில் வணிக நிறுவனங்களுக்குள் மழைநீா் புகுவதையும், சேதமடைந்த சாலையை சீமைக்க தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
மாா்த்தாண்டம் பழைய திரையரங்கு சந்திப்பில் நடைபெற்ற இப் போராட்டத்துக்கு கட்சியின் மாநில துணைத் தலைவா் இரா. அரிஹரன் தலைமை வகித்தாா். குமரி மேற்கு மாவட்ட செயலா் எம்.பி. ரவி முன்னிலை வகித்தாா். மேற்கு மாவட்ட தலைவா் ஆா். அஜய், இளைஞரணி செயலா் விஜயகுமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். இப்போராட்டத்தில் ஈடுபட்ட 20 பேரை மாா்த்தாண்டம் போலீஸாா் கைது செய்தனா்.