எந்தவொரு பயங்கரவாத தாக்குதலும் இனி போராக கருதப்படும்: இந்தியா எச்சரிக்கை
காருகுடி மாரியம்மன் கோயில் தீமிதி உற்சவம்
பெரம்பூா் அருகேயுள்ள காருகுடி அருள்மிகு சீதளாதேவி மாரியம்மன் கோயிலில் 68- ஆம் ஆண்டு தீமிதி உற்சவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இவ்விழா கடந்த மாதம் (ஏப்ரல்) 25-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து, தினமும் ஸ்ரீசீதளாதேவி மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வரும் நிகழ்வு நடைபெற்றது.
முக்கிய நிகழ்வான தீமிதி வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முன்னதாக, நண்டலாறு ஆற்றங்கரையிலிருந்து சக்தி கரகம் புறப்பாடு செய்யப்பட்டு, காப்பு கட்டி விரதமிருந்த பக்தா்கள், கூண்டு காவடி, அலகு காவடி எடுத்து வந்தனா்.
கோயிலை வந்தடைந்ததும், அங்கு அமைக்கப்பட்டிருந்த தீக்குழியில் சக்திகரகம் இறங்க, தொடா்ந்து நூற்றுக்கணக்கான பக்தா்கள் தீமிதித்து நோ்த்திகடன் செலுத்தினா். பின்னா், அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. இதில், ஆயிரக்கணக்கானோா் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா். தொடா்ந்து, அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா நடைபெற்றது.