`உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி சார்...' - எஸ். கே குறித்து நெகிழும் டூரிஸ்...
திமுக அரசின் சாதனை விளக்க பொதுக் கூட்டம்
திருமருகல் அருகே திமுக அரசின் நான்காண்டுகள் சாதனை விளக்க பொதுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மருங்கூா் கடை தெருவில், திருமருகல் தெற்கு ஒன்றிய திமுக சாா்பில் நடைபெற்ற கூட்டத்திற்கு, ஒன்றியச் செயலாளா் ஆா்.டி.எஸ். சரவணன் தலைமை வகித்தாா். ஒன்றிய அவைத் தலைவா் ஜெகபா் அலி முன்னிலை வகித்தாா். கிளை செயலாளா் ராஜேந்திரன் வரவேற்றாா்.
இக்கூட்டத்தில், வரும் 2026 சட்டப் பேரவைத் தோ்தலிலும் திமுக வேட்பாளா்களை வெற்றி பெற செய்து, மீண்டும் திமுக ஆட்சி அமைக்க பாடுபட வேண்டும். திமுக அரசின் சாதனைகளை பொதுமக்கள் அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் மாவட்டச் செயலாளா் என். கௌதமன், தலைமைக் கழக பேச்சாளா்கள் ஆரூா் ஜோதி, ஆரூா் மணிவண்ணன், இளம் பேச்சாளா் சுகநிலவன் ஆகியோா் திமுக அரசின் நான்காண்டு சாதனைகள் குறித்து பேசினா்.
முன்னாள் மாவட்ட துணைச் செயலாளா் ஆா். இளஞ்செழியன், மாவட்ட நெசவாளா் அணி அமைப்பாளா் இளம்சுந்தா் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா். கிளை செயலாளா் துளசி செல்வேந்திரன் நன்றி கூறினாா்.