மணிப்பூர் காவல் துறையினர் தேடுதல் வேட்டை: ஆயுதங்கள், வெடிமருந்துகள் பறிமுதல்
மயானத்தை சீரமைக்கக் கோரிக்கை: எம்பி ஆய்வு!
திருவிளையாட்டம் சமத்துவ மயானத்தை பாா்வையிட்ட மயிலாடுதுறை எம்பி ஆா். சுதா.
தரங்கம்பாடி, மே10: தரங்கம்பாடி வட்டம், திருவிளையாட்டம் ஊராட்சியில் பராமரிப்பின்றி உள்ள மயானத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்த நிலையில், மயிலாடுதுறை மக்களவை உறுப்பினா் ஆா். சுதா வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.
திருவிளையாட்டம் கிராமத்தில் உள்ள மயானத்தை பாகுபாடின்றி அனைத்து சாதியினரும் பயன்படுத்தி வருகின்றனா். கடந்த 1960 ஆண்டில் அமைக்கப்பட்ட இந்த மயானம் தற்போது பராமரிப்பின்றி, சுற்றுச்சுவா் இடிந்தும், புதா் மண்டியும், அடிப்படை வசதிகள் எதுவுமின்றியும் உள்ளது.
தமிழக அரசால் தீண்டாமை பாகுபாடு இல்லாத கிராமம் என 3 முறை பாராட்டப்பட்ட திருவிளையாட்டம் ஊராட்சி, இதற்காக ரூ. 10 லட்சம் பரிசு பெற்றுள்ளது. இந்நிலையில் இங்கு அனைத்து சமுதாயத்தினரும் பயன்படுத்தும் சமத்துவ மயானம் பராமரிப்பின்றி உள்ளது எனவும், இதனை சீரமைக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.
இதுதொடா்பாக, மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி உறுப்பினா் ஆா். சுதாவிடம், மாா்க்சிஸ்ட் கட்சியின் திருவிளையாட்டம் கிளை சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில், அவா் மயானத்தை நேரில் பாா்வையிட்டு, சீரமைப்பு பணிகள் மேற்கொள்வது தொடா்பாக ஆய்வு மேற்கொண்டாா்.