செய்திகள் :

Doctor Vikatan: வியர்வை வாடையை விரட்ட, பெர்ஃபியூம் உபயோகிக்கலாமா, பவுடர் போடலாமா.. எது சரி?

post image

Doctor Vikatan: எனக்கு இயல்பிலேயே அதிகம் வியர்க்கும். கோடைக்காலத்தில் இன்னும் அதிகம் வியர்க்கும். இதனால் எப்போதும் என் உடலில் வியர்வை வாடை வந்துகொண்டே இருக்கும்.  வியர்வை வாடையை விரட்ட, பெர்ஃபியூம் உபயோகிக்கலாமா, பவுடர் போடலாமா?


பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா

சருமநல மருத்துவர் பூர்ணிமா

வியர்வைக்கென தனி வாடையே கிடையாது. அதாவது நாம் நினைக்கிற மாதிரி வியர்வைக்கென  கெட்ட வாடை என ஒன்று கிடையாது. வியர்வையோடு பாக்டீரியா  அல்லது பூஞ்சைக் கிருமிகள் சேரும்போதுதான் அதன் கெட்ட வாடை வருகிறது. 

பெர்ஃபியூம் உபயோகிக்கும்போது நம் உடலிலிருந்து ஒருவித நல்ல வாடையை உணர முடியும். டியோடரன்ட் என்பது வியர்வையின் வாடையை தன் வாடையின் மூலம்  மறைக்கும். 

ரோல் ஆன் என்பது அதில் சேர்க்கப்படும் அலுமினியம் கூற்றைப் பயன்படுத்தி  வியர்வை வெளியேறாதபடி, வியர்வை சுரப்பிகளை மூடிவிடும். பட்டு ஜாக்கெட் போன்ற உடைகளை  அணியும்போது வியர்வை கசிந்து, அதன் அடையாளம் உடையில் தெரியாமலிருக்க ரோல் ஆன் உபயோகிக்கலாம்.

இவற்றையெல்லாம் உபயோகிப்பது சரியா, தவறா என்றால்  இவற்றில் வாசனைக்காகப் பயன்படுத்தும் கூறுகள் நிச்சயம் சருமத்தை பாதிக்கும். அதனால்தான் அதிக வாசனை உள்ள பவுடர், சோப் போன்றவற்றைக்கூட உபயோகிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. கான்டாக்ட் அலர்ஜி என்கிற ஒவ்வாமைக்கு அதுதான் பிரதான காரணமே.

பெர்ஃபியூம் உபயோகிக்கும்போது என்பது நம் உடலிலிருந்து ஒருவித நல்ல வாடையை உணர முடியும்.

மாநிற சருமம் கொண்ட நம்மைப் போன்ற தென்னிந்தியர்களுக்கு இதனால் ஏற்படும் பாதிப்பு இன்னும் அதிகம். உதாரணத்துக்கு அக்குள் பகுதியில் வியர்வைக்காக உபயோகிக்கும் இந்த வாசனைப் பொருள்களால், அந்தப் பகுதி அளவுக்கதிகமாக கருத்துப்போலாம்.

'அப்படியென்றால் வியர்வை நாற்றத்தை மறைக்க எதைத்தான் உபயோகிப்பது' என்ற கேள்வி வரலாம். ஆன்டி ஃபங்கல் மற்றும் ஆன்டி பாக்டீரியல் தன்மை கொண்ட டஸ்ட்டிங் பவுடர்கள்   கிடைக்கின்றன. இந்த பவுடர்கள்  பாக்டீரியாவோ, பூஞ்சையோ வளரவிடாமல் பார்த்துக்கொள்வதோடு, ஈரப்பதம் இல்லாமலும் பார்த்துக்கொள்ளும். எனவே நீங்கள் கேட்ட எல்லாவற்றையும்விட டஸ்ட்டிங் பவுடரே சருமத்துக்குப் பாதுகாப்பானது. தரமான பிராண்ட் தயாரிப்பாகப் பார்த்து வாங்கி உபயோகிக்கவும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    

இறுக்கமற்ற பிரா முதல் பாக்ஸர் ஷார்ட்ஸ் வரை.. உள்ளாடை டிப்ஸ்!

அனைவரின் கவனத்தையும் ஈர்க்க வேண்டும், விலை உயர்ந்ததாக இருக்க வேண்டும் என மேலாடைகளுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை உள்ளாடைகளுக்கு பலரும் கொடுப்பது இல்லை. கிழிந்துபோன, பழைய, இறுக்கமான உள்ளாடைகள் அணிந... மேலும் பார்க்க

``நம் எதிரிகள் கோழை; நாங்கள் வென்றுவிட்டோம்'' - பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரிப்

இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வந்த நிலையில், நேற்று இரு நாடுகளுக்கிடையே தாக்குல் நிறுத்த ஒப்பந்தம் கூடி வந்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பு வெளியான 3 மணி ... மேலும் பார்க்க

Kidney Stone: கிட்னி ஸ்டோன் வராமல் தடுக்க முடியுமா? கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்!

சிறுநீரகக் கற்கள் உருவாக காரணங்கள்; எப்படிக் கண்டறிவது; சிறுநீரகக் கற்கள் தடுக்க, தவிர்க்க என்ன செய்ய வேண்டும் என சொல்கிறார், சிறுநீரகவியல் நிபுணர் என்.ஆனந்தன். சிறுநீரகக் கல்சிறுநீரகக் கற்கள் உருவாக ... மேலும் பார்க்க

`நான் இருக்கும் இடத்தில் இடைவிடாத குண்டு சத்தம் கேட்கிறது' - ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஓமர் அப்துல்லா

இந்தியா பாகிஸ்தான் இடையே மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், இன்றும் காஷ்மீரில் தாக்குதல் நடத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. ஜம்மு காஷ்மீர் நகரம் முழுவதும் மின்சாரம் நிறுத்தப்பட்டு, இருள் நிறைந... மேலும் பார்க்க

Pakistan: தீவிரமடையும் பலுசிஸ்தான் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்.. பாகிஸ்தானின் நிலை என்ன?

பாகிஸ்தான், இந்தியா உடனான மோதலில் எல்லை மீறிய தாக்குதலில் ஈடுபட்டுவரும் அதேவேளையில் பாகிஸ்தானுக்குள் இருக்கும் பலுசிஸ்தான் மாகாணத்தின் பகுதிகளைக் கைப்பற்றியுள்ள பலூச் கிளர்ச்சியாளர்கள் பாகிஸ்தான் ராண... மேலும் பார்க்க

300-400 ட்ரோன்களை பயன்படுத்தி தாக்கிய பாகிஸ்தான்; இந்தியா முறியடித்தது எப்படி?

பாகிஸ்தான் ராணுவம் லே முதல் சர் கிரிக் பகுதிவரை இந்திய ராணுவ தளங்களைக் குறிவைத்து 36 இடங்களில் 300 முதல் 400 ட்ரோன்களைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து விங் ... மேலும் பார்க்க