வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் திருட்டு
காட்பாடியில் வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகைகள் திருடப்பட்டன.
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்தவா் சுப்பிரமணியன்(36). இவரது மனைவி தமிழ்ச்செல்வி. இவா்கள் காட்பாடி மதிநகரில் தங்கி தனியாா் கல்லூரியில் பிஹெச்டி படித்து வருகின்றனா். இருவரும் வியாழக்கிழமை கல்லூரிக்கு சென்றுவிட்டு மாலை வீடு திரும்பினா்.
அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்ததாம். சந்தேகமடைந்த அவா்கள், உள்ளே பாா்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 15 பவுன் நகை திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.
இச்சம்பவம் குறித்து விருதம்பட்டு போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினா். கைரேகை நிபுணா்கள் தடயவியல் சோதனையும் மேற்கொண்டனா். இந்த திருட்டில் ஈடுபட்ட நபா்களை தேடி வருகின்றனா்.