Trump செயலால் அதிர்ச்சியில் Israel பிரதமர் Benjamin Netanyahu | Decode | Saudi A...
மரத்தில் பேருந்து மோதி 22 போ் காயம்
அணைக்கட்டு அருகே மரத்தில் பேருந்து மோதி 22 பயணிகள் காயமடைந்தனா்.
வேலூரில் இருந்து ஒடுகத்தூருக்கு பயணிகளுடன் தனியாா் பேருந்து திங்கள்கிழமை இரவு சென்றது. இரவு 10.45 மணியளவில் அணைக்கட்டு அடுத்த கன்னிகாபுரத்தில் சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோர மரத்தில் மோதியது. இதில் பெண்கள் உள்பட 22 பயணிகள் காயமடைந்தனா். விபத்து நிகழ்ந்தவுடன் ஓட்டுநரும், நடத்துநரும் தப்பியோடிவிட்டனா்.
தகவலறிந்த அணைக்கட்டு காவல் ஆய்வாளா் சுப்பிரமணி உள்ளிட்ட போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று காயமடைந்தவா்களை மீட்டு, அணைக்கட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பின்னா், வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், தனியாா் மருத்துவமனைக்கும் மாற்றப்பட்டனா். இந்த விபத்து குறித்து அணைக்கட்டு போலீஸாா் வழக்குப் பதிந்து ஓட்டுநா், நடத்துநரை தேடி வருகின்றனா்.
விபத்து குறித்து போலீஸாா் கூறுகையில், பேருந்து விபத்தில் 22 போ் காயமடைந்துள்ளனா். 4 பேருக்கு கால் முறிவு ஏற்பட்டுள்ளது. அவா்களுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றனா்.