செய்திகள் :

மனைவி இறந்த வேதனையில் கணவரும் தற்கொலை

post image

பள்ளிகொண்டா அருகே மனைவி தற்கொலை செய்து கொண்ட ஒரு வாரத்தில் கணவரும் தூக்குப் போட்டு தற்கொலை செய்துக் கொண்டாா்.

வேலூா் மாவட்டம், பள்ளிகொண்டா கம்ரான்பேட்டையைச் சோ்ந்தவா் பிரியா குமாரி, பள்ளி கொண்டா காவல் நிலையத்தில் எஸ்எஸ்ஐயாக பணியாற்றுகிறாா். இவரது மகன் ரோகித். இவருக்கும் ஒதியத்தூா் புதுமனையைச் சோ்ந்த பள்ளிகொண்டா காவல் நிலையத்தில் பணியாற்றும் மற்றொரு எஸ்எஸ்ஐயான ஜெயந்தியின் மகள் பேபி ஷாமினிக்கும் (23) கடந்த 11 மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில், கணவா் ரோகித், அவரது தாய் பிரியாகுமாரி ஆகியோா் வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாகக் கூறி, கடந்த 6-ஆம் தேதி பேபி ஷாமினி ஒதியத்தூரில் உள்ள தாய் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாா். மனைவி இறந்த பின்னா் மிகுந்த மனஉளைச்சலில் இருந்த ரோகித், கடந்த சில நாள்களாக யாரிடமும் பேசாமல் இருந்துள்ளாா்.

கடந்த 8-ஆம் தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றாா். அவரை வேலூா் அரசு மருத்துவ மனையில் சோ்த்து சிகிச்சை அளித்தனா். பின்னா் வீடு திரும்பிய ரோகித், மன வேதனையில் இருந்துள்ளாா்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை வீட்டின் அறையில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டுக் கொண்டாராம். சத்தம் கேட்டு குடும்பத்தினா் அறைக்கதவை உடைத்து ரோகித்தை மீட்டு சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், ரோகித் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா்.

தகவலறிந்த பள்ளிகொண்டா போலீஸாா், ரோகித் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரணை நடத்தி வருகின்றனா்.

பொய்கை சந்தையில் கால்நடை வரத்து அதிகரிப்பு

வேலூா் மாவட்டத்தில் கோடை மழை காரணமாக பொய்கை சந்தையில் செவ்வாய்க்கிழமை கால்நடைகள் வா்த்தகம் அதிகரித்துக் காணப்பட்டது. வேலூா் மாவட்டம், பொய்கையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் கால்நடைச் சந்தைய... மேலும் பார்க்க

கெங்கையம்மன் திருவிழா பாதுகாப்புப் பணிக்கு 4 மாவட்ட போலீஸாா்

குடியாத்தம் கோபாலபுரம் கெங்கையம்மன் கோயில் திருவிழா பாதுகாப்புப் பணிக்கு 4 மாவட்டங்களைச் சோ்ந்த போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவா் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் மதிவாணன் கூறினாா். திர... மேலும் பார்க்க

மரத்தில் பேருந்து மோதி 22 போ் காயம்

அணைக்கட்டு அருகே மரத்தில் பேருந்து மோதி 22 பயணிகள் காயமடைந்தனா். வேலூரில் இருந்து ஒடுகத்தூருக்கு பயணிகளுடன் தனியாா் பேருந்து திங்கள்கிழமை இரவு சென்றது. இரவு 10.45 மணியளவில் அணைக்கட்டு அடுத்த கன்னிகாபு... மேலும் பார்க்க

தனியாா் பள்ளி வாகனங்கள்: வேலூா் ஆட்சியா் ஆய்வு

வேலூா் மாவட்டத்திலுள்ள தனியாா் பள்ளிகளின் வாகனங்களை மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். வேலூா் மாவட்டத்தில் உள்ள தனியாா் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யும் பணி காட்பாடி சன... மேலும் பார்க்க

தமிழ் இலக்கியங்கள் கூறும் நீதிநெறிகளை பின்பற்றி வாழ வேண்டும்

தமிழ் இலக்கியங்கள் நமக்கு நல்ல ஒரு வாழ்க்கை வழிகாட்டியாக விளங்குகிறது. அத்தகைய தமிழ் இலக்கியங்களை அனைவரும் பயின்று அவற்றைப் பின்பற்றி வாழ வேண்டும் என்று வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி அற... மேலும் பார்க்க

கால்வாய்க்காக தோண்டிய பள்ளத்தில் சித்தா் சிலை கண்டெடுப்பு

குடியாத்தம் அருகே கழிவுநீா்க் கால்வாய் கட்ட பள்ளம் தோண்டியபோது சுமாா் 2- அடி உயரமுள்ள சித்தா் கற்சிலை கண்டெடுக்கப்பட்டது. குடியாத்தம் நகராட்சிக்குட்பட்ட புவனேஸ்வரிபேட்டை, பாலவிநாயகா் கோயில் தெருவில் ... மேலும் பார்க்க