செய்திகள் :

`உங்க அடுத்த அத்தியாயத்திலும் வெற்றிபெற..!’ - ரோஹித் சர்மாவை வீட்டிற்கு அழைத்து வாழ்த்திய பட்னாவிஸ்

post image

கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா சமீபத்தில் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவர் 67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். 2013-ம் ஆண்டு மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் முதல் முறையாக டெஸ்ட் போட்டியில் விளையாடினார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 4,301 ரன் எடுத்துள்ள ரோஹித் சர்மா 2019ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இரட்டைசதம் அடித்து சாதனை படைத்தார்.

ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்ததை தொடர்ந்து மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தனது அரசு இல்லமான வர்ஷாவிற்கு ரோஹித் சர்மாவை அழைத்திருந்தார். அவர் டெஸ்ட் போட்டியில் இவ்வளவு நாட்களும் சிறப்பாக விளையாடி டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்த முதல்வர் பட்னாவிஸ், `வாழ்க்கையின் அடுத்த அத்தியாயத்தில் வெற்றி பெற வாழ்த்துவதாக' தெரிவித்தார்.

`அவரது பயணத்தின் அடுத்த அத்தியாயத்தில்..!’

இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் இருவரும் சந்தித்த புகைப்படங்களைப் பகிர்ந்த முதல்வர் ஃபட்னாவிஸ், "இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் ஷர்மாவை எனது அதிகாரப்பூர்வ இல்லமான வர்ஷாவில் வரவேற்று, சந்தித்து உரையாடியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதற்கும், அவரது பயணத்தின் அடுத்த அத்தியாயத்தில் தொடர்ந்து வெற்றி பெறுவதற்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்தேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

ரோஹித் சர்மா கடந்த வாரம்தான் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறப்போவதாகவும், ஒரு நாள்போட்டியில் தொடர்ந்து விளையாடுவேன் என்றும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டு இருந்தார். ரோஹித் சர்மாவின் மனைவி ரித்திகா அவரின் ஸ்போர்ட்ஸ் மேனேஜராக இருக்கிறார்.

ரோஹித் சர்மாவை தொடர்ந்து விராட் ஹோலியும் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஒரே நேரத்தில் இரண்டு முன்னணி வீரர்கள் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளனர்.

IPL Schedule : 'சென்னையில் போட்டி கிடையாது!' - ஐ.பி.எல் இன் புதிய அட்டவணை; முழுவிவரம்!

'புதிய அட்டவணை!'இந்தியா - பாகிஸ்தான் இடையே நிலவிவந்த பதற்றமான சூழல் ஐ.பி.எல் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டிருந்தன. இப்போது மீண்டும் எஞ்சியிருக்கும் போட்டிகளுக்கான புதிய அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.... மேலும் பார்க்க

Kohli : '12 ஆண்டுகளுக்கு முன் நீ கொடுத்த அந்த கயிறு..!' - கோலியின் ஓய்வு குறித்து நெகிழும் சச்சின்

'கோலி ஓய்வு!'இந்திய அணியின் சீனியர் வீரரான விராட் கோலி டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்திருக்கிறார். விராட் கோலியின் ஓய்வு முடிவுக்கு சச்சின் ஒரு நெகிழ்ச்சியான வாழ்த்துச் செய்தியை பதிவிட்டிருக்க... மேலும் பார்க்க

Virat Kohli : 'கோலியின் ஓய்வுக்கு பிசிசிஐ-யும் தான் காரணம்!' - ஏன் தெரியுமா?

'விராட் கோலி ஓய்வு!'டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்திருக்கிறார். ரசிகர்கள் எதிர்பார்க்காத முடிவு இது. எப்படியும் விராட் கோலி இன்னும் 2 ஆண்டுகளாவது ஆடுவார் என்பதுதான் அனைவரி... மேலும் பார்க்க

Virat Kohli : 'புன்னகையுடன் விடைபெறுகிறேன்!' - ஓய்வை அறிவித்த விராட் கோலி!

'விராட் கோலி ஓய்வு!'விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற விரும்புவதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருந்த நிலையில், இப்போது அவரே ஓய்வை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். விராட் கோலி'நெகிழ்... மேலும் பார்க்க