பணவீக்கம் 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைந்ததால், பங்குச் சந்தைகள் உயர்வுடன்...
”தெருவைக் காணவில்லை” - ஜி.பி.முத்து புகார்; வீட்டை முற்றுகையிட்ட ஊர் மக்கள்; போலீஸ் குவிப்பு
தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி- பெருமாள்புரத்தைச் சேர்ந்தவர் பேச்சிமுத்து. ஜி.பி.முத்து என்ற பெயரில் யூ-டியூப்பில் இவர் பிரபலம்.
இதே பகுதியில் உச்சினிமாகாளி அம்மன் திருக்கோயில் உள்ளது. இக்கோயிலில் தற்போது கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன.
"கோயில் கட்டுமானப் பணிகளால் 15 அடி அகலம் கொண்ட தெருவின் அகலம் 8 அடியாகக் குறைந்துள்ளது. இடம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது" எனக்கூறி, கடந்த 12-ம் தேதி, "பெருமாள்புரத்தில் உள்ள கீழத்தெருவைக் காணவில்லை, வருவாய்த்துறையினர் முறையாக நில அளவை செய்து ஆக்கிரமிப்பிலிருந்து அந்த இடத்தை மீட்க வேண்டும்” எனத் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் ஜி.பி.முத்து புகார் அளித்திருந்தார்.

இதனையடுத்து ஜி.பி.முத்து ஊர் மக்களையும், ஊர் கோயிலையும் அவதூறாகப் பேசியதாகக் கூறி ஊர்மக்கள் சேர்ந்து ஜி.பி.முத்துவின் வீட்டை முற்றுகையிடுவோம் எனக் கூறியிருந்தனர்.
இந்த நிலையில் குலசேகரன்பட்டினம் காவல் நிலைய போலீஸார், ஜி.பி.முத்துவின் வீட்டின் முன்பு காவலில் ஈடுபட்டனர்.
இதற்கிடையில் இந்தச் சம்பவம் தொடர்பாக நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் கோயில் முன்பு குவிந்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அவர்களிடம் போலீஸார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்த சமயத்தில், வீட்டிலிருந்து அங்கு ஜி.பி.முத்து வருகை தந்தார்.
ஜி.பி.முத்துவிற்கும் கிராம மக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது கிராம மக்கள் ”ஜி.பி.முத்து ஒழிக” எனக் கோஷம் எழுப்பினர்.
பதிலுக்கு, “ஜி.பி.முத்து ஒழிக” என, தனக்குத்தானே அவரும் கோஷமிட்டதால் அங்குப் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
இதையடுத்து போலீஸார், ஜி.பி.முத்துவை அவரது வீட்டிற்கு அழைத்து வந்தனர்.

இது குறித்துப் பேசிய ஊர்மக்கள், ”4 தலைமுறைகளாக வழிபட்டு வரப்படும் கோயில் இது. ஜி.பி.முத்து விளம்பரத்திற்காக இதுபோல் செயலில் ஈடுபடுகிறார்.
கோயில் ஏற்கனவே இருந்த இடத்தில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. எந்த ஆக்கிரமிப்பும் செய்யப்படவில்லை.
கோயிலைப் புதுப்பித்துக் கட்டுவதால், கீழத்தெருவைக் காணவில்லை என்கிறார். அவர் கூறுவது முற்றிலும் பொய்” என்றனர் .
ஜி.பி.முத்து பேசும்போது, ”பொதுமக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எங்களை ஒதுக்குகிறார்கள். கோயில் இடத்திலும் கீழத்தெருவையும் ஆக்கிரமித்து சிலர் வீடுகள் கட்டி உள்ளனர்.
உரிய நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்பினை மீட்காவிட்டால் தனது நான்கு குழந்தைகளுடன் தீக்குளிப்பேன்” என்றார்.
பரபரப்பைக் குறைப்பதற்காக அங்கு போலீஸார் குவிக்கப்பட்டனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs