ஓடும் பேருந்திலிருந்து குழந்தை தவறிவிழுந்து பலி: ஓட்டுநர், நடத்துநர் பணியிடை நீக்கம்
சேலம்: சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே ஓடும் பேருந்திலிருந்து 9 மாதக் குழந்தை தவறி விழுந்து உயிரிழந்த சம்பவத்தில், பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
தர்மபுரி மாவட்டம் முத்தம்பள்ளி கரங்களூர் பகுதியைச் சேர்ந்த ராஜதுறை - முத்துலட்சுமி தம்பதியின் மகன், நபீஸ் என்ற 9 மாத ஆண் குழந்தை நேற்று முன்தினம் இரவு சங்ககிரி அருகே அரசுப் பேருந்தில் பயணம் செய்த போது ஓடும் பேருந்திலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தது.
இது தொடர்பாக தேவூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் அரசுப் பேருந்து ஓட்டுநர் சிவன் மணி மற்றும் நடத்துநர் பழனிசாமி ஆகிய இருவரும் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.