செய்திகள் :

தற்காலிக மாற்று வீரர்களை தேர்வு செய்யலாம்..! புதிய விதிமுறைகள் அறிவிப்பு!

post image

இந்தியாவுக்கு வரமுடியாத வெளிநாட்டு வீரர்களுக்காக தற்காலிக மாற்று வீரர்களை தேர்வு செய்ய ஐபிஎல் நிர்வாகம் புதிய விதியை அறிவித்துள்ளது.

பாகிஸ்தானுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டன. நிறுத்தப்பட்ட போட்டிகள் வரும் மே.17ஆம் தேதி முதல் ஜூன் 3ஆம் தேதி வரை நடைபெற இருக்கின்றன.

தெ.ஆ., ஆஸி., இங்கிலாந்து வீரர்கள் மீண்டும் ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மாற்றப்பட்ட ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் வேளையில் அவரவர் தேசிய அணிகளுக்கான போட்டிகள் இருப்பதால் ஐபிஎல் போட்டிகளில் கலந்துகொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், பிடிஐ செய்தி நிறுவனம் ஐபிஎல் அணிகளுக்கு பிசிசிஐ நிர்வாகம் அளித்ததாகக் கூறும் ஈமெயிலில் கூறப்பட்டவை:

வெளிநாட்டு வீரர்களின் காயம், தனிப்பட்ட காரணங்களுக்காக அவர்கள் மீண்டும் இந்தியாவுக்கு வரமாலிருப்பதால் அவர்களுக்கான மாற்று வீரர்களை ஐபிஎல் அணிகள் தேர்வு செய்யலாம். ஆனால், இந்த மாற்றங்கள் இந்த சீசனோடு முடிவுக்கு வரும்.

அடுத்தாண்டு தக்கவைப்பு பட்டியலில் தற்போது எடுக்கப்படும் வீரர்களை சேர்க்கமுடியாது.

தற்காலிக மாற்றுவீரர்கள் ஐபிஎல் 2026 ஏலத்தில் பதிவு செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

நிறுத்தப்பட்ட போட்டிகள் வரும் மே.17ஆம் தேதி முதல் ஜூன் 3ஆம் தேதி வரை நடைபெற இருக்கின்றன.

சிஎஸ்கே அணிக்கு திரும்பும் டெவால்டு பிரீவிஸ்..! ரசிகர்கள் உற்சாகம்!

இளம் சிஎஸ்கே வீரர் டெவால்டு பிரீவிஸ் இந்தியாவுக்கு மீண்டும் திரும்புவதாகக் கூறியுள்ளார்.தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த 22 வயதான டெவால்டு ப்ரீவிஸ் மாற்று வீரராக சிஎஸ்கே அணியில் இணைந்தார்.சிறப்பாக விளையாட... மேலும் பார்க்க

ஜேக் பிரேசர் மெக்கர்க் விலகல்..! வங்கதேச வீரர் சேர்ப்பு!

தில்லி கேபிடல்ஸ் அணி வீரர் ஜேக் பிரேசர் மெக்கருக்குப் பதிலாக முஸ்தபிசூர் ரஹ்மான் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் ஆஸி. வீரர்கள் கலந்துகொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ள... மேலும் பார்க்க

ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றிலிருந்து விலகும் தென்னாப்பிரிக்க வீரர்கள்!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இருப்பதால் தென்னாப்பிரிக்க வீரர்கள் ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றில் கலந்து கொள்ளமாட்டார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.ஆஸ்திரேலியாவுடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட... மேலும் பார்க்க

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்: தயக்கம் காட்டும் வெளிநாட்டு வீரர்கள்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி வரும் 17-ஆம் தேதி மீண்டும் தொடங்கும் நிலையில், வெளிநாட்டு வீரர்களை மீண்டும் அதில் பங்கேற்கச் செய்யும் வகையில் அவர்கள் சார்ந்த கிரிக்கெட் வாரியங்களுக்கு பிசிசிஐ அழுத்தம் கொடுத... மேலும் பார்க்க

ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் தொடர் மே 17 தொடங்கும்: பிசிசிஐ

ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் தொடர் மே 17-ஆம் தேதி முதல் தொடங்கும் என்று பிசிசிஐ இன்று(மே 12) அறிவித்துள்ளது. இறுதிப்போட்டி ஜூன் 3-ஆம் தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போட்டிகள் நடைபெறும் இடங்க... மேலும் பார்க்க

ஐபிஎல் தொடங்கினாலும் ஸ்டார்க் வர மாட்டார்! தில்லி அணிக்கு பெரும் பின்னடைவா?

ஐபிஎல் தொடர் மீண்டும் தொடங்கி நடைபெற்றாலும் தில்லி வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் இந்தியாவுக்கு செல்லமாட்டார் என அவரது மேலாளர் தெரிவித்திருப்பது தில்லி அணி ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்திருக்கி... மேலும் பார்க்க