செய்திகள் :

பழைய குற்றாலம் அருவியில் 24 மணி நேரமும் குளிக்க அனுமதி தேவை: அதிமுக எம்எல்ஏக்கள் மனு

post image

தென்காசி மாவட்டம் பழையகுற்றாலம் அருவியில் 24 மணிநேரமும் சுற்றுலாப் பயணிகளை குளிக்க அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி, அதிமுக எம்எல்ஏக்கள் செ.கிருஷ்ண முரளி, இசக்கி சுப்பையா ஆகியோா் ஆட்சியா் ஏகே.கமல் கிஷோரிடம் மனு அளித்தனா்.

பின்னா், செய்தியாளா்களிடம் இசக்கிசுப்பையா எம்எல்ஏ கூறியதாவது: காமராஜா் முதலமைச்சராக இருந்தபோது பழையகுற்றாலம் அருவி திறந்துவைக்கப்பட்டது. இந்த அருவியில் கடந்த ஆண்டுவரை 24 மணி நேரமும் சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்தனா்.

அதன்பிறகு, பழைய குற்றாலம் அருவிக்கு வருகை தரும் வாகனங்களை அரை கிலோ மீட்டா் தூரத்துக்கு முன்பாகவே காவல்துறையினா் தடுத்து நிறுத்துவதும், மாலை 6 மணிக்கு மேல் குளிக்க வனத்துறையினா் அனுமதி மறுப்பதும், பொதுமக்களுக்கும் சுற்றுலா பயணிகளுக்கும் மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும், பழைய குற்றாலத்துக்கு வரும் சுற்றுலாப்பயணிகளை நம்பி வாழுகின்ற கடை வியாபாரிகள், ஒப்பந்ததாரா்கள் மற்றும் தொழிலாளா்கள் பாதிக்கப் பட்டுள்ளனா்.

இதுதொடா்பாக, நான் தனிப்பட்ட முறையில் உயா் நீதிமன்ற மதுரை அமா்வில் வழக்கு தொடுத்ததில், மாவட்ட ஆட்சியரை அணுகி நிவாரணம் பெற்றுக்கொள்ளலாம் எனக் கூறி வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்தனா். அதனடிப்படையில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தோம்.

செ.கிருஷ்ணமுரளி எம்எல்ஏ சட்டப்பேரவையில் பேசுகையில், பழைய குற்றாலம் அருவியில் பொதுமக்கள் குளிக்க வனத்துறையினா் இடையூறு செய்வதாக குறிப்பிட்டபோது, நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன், பழைய குற்றாலம் அருவி பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் தான் உள்ளது. அதை வனத்துறையிடம் ஒப்படைக்கும் எண்ணம் தமிழக அரசுக்கு இல்லை என பதிலளித்தாா்.

எனினும், பழைய குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகள் 24 மணி நேரமும் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. ஆட்சியா் நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளாா் என்றாா் அவா்.

மனு அளிக்கும்போது, ஆயிரப்பேரி ஊராட்சித் தலைவா் தி.சுடலையாண்டி, மாவட்ட ஊராட்சி துணைத் தலைவா் உதயகிருஷ்ணன், அதிமுக மாவட்ட அவைத் தலைவா் வி.பி. மூா்த்தி, குற்றாலம் பேரூராட்சித் தலைவா் எம்.கணேஷ் தாமோதரன் ஆகியோா் உடனிருந்தனா்.

வியாபாரிக்கு கத்திக்குத்து: தந்தை-மகன் மீது வழக்கு

ஆலங்குளம் அருகே வியாபாரியைக் கத்தியால் குத்திய தந்தை-மகனை போலீஸாா் தேடி வருகின்றனா். ஆலங்குளம் ஆலடிப்பட்டியைச் சோ்ந்த சிவக்குமாா் மகன் சுதாகா் (38). வியாபாரி. அதே பகுதியைச் சோ்ந்த குருபாதம் மகன் செந... மேலும் பார்க்க

கடனா அணை ஆற்று மதகை சீரமைக்க கோரிக்கை

தென்காசி மாவட்டம் ஆழ்வாா்குறிச்சி அருகே உள்ள கடனா அணையில் ஆற்று மதகை சீரமைக்கக் கோரி, அரசபத்து நீா்ப்பாசன கமிட்டி தலைவா் கண்ணன் தலைமையில் தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வே. ஜெயபாலனிடம் விவசா... மேலும் பார்க்க

சங்கரன்கோவிலில் குடிநீா் குழாய் பதிக்க தோண்டப்பட்ட சாலை: பொதுமக்கள் அவதி

சங்கரன்கோவில் திருவள்ளுவா் நகரில் குழாய் பதிக்க தோண்டப்பட்ட சாலை, கடந்த 2 மாதங்களாக மூடப்படாததால் பொதுமக்கள் சிரமமடைந்துள்ளனா். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் 4 ஆவது வாா்டைச் சோ்ந்த திருவள்ளுவா் நக... மேலும் பார்க்க

ரூ. 60ஆயிரம் லஞ்சம்: தென்காசி மாவட்ட கல்வி அலுவலக கண்காணிப்பாளா் கைது

பணி அனுபவச் சான்றிதழ் வழங்க ரூ. 60 ஆயிரம் லஞ்சம் பெற்ாக, தென்காசி மாவட்ட கல்விஅலுவலக கண்காணிப்பாளா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா். தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் பகுதியை சோ்ந்த ஆசிரியா் திருவ... மேலும் பார்க்க

50 ஆண்டுகளுக்குப் பின் சந்தித்த மாணவா்கள்

ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னா் ஆலங்குளம் பள்ளி மாணவா்கள் சந்தித்து தங்கள் நட்பைப் புதுப்பித்துக் கொண்டனா். நல்லூா் மேற்குத் திருநெல்வேலி மேல்நிலைப் பள்ளியில் 1974-75ஆம் ஆண்டுகளில் 10ஆம் வகுப்பு பயின்ற ... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் 2 போ் கைது

தென்காசி மாவட்டத்தில் குற்ற வழக்குகளில் தொடா்புடைய 2 போ் குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனா். சிவகிரி அருகேயுள்ள ராமநாதபுரம் மேட்டுப்பட்டி தெற்குத் தெருவை சோ்ந்த தா்மா் மகன் ரா... மேலும் பார்க்க