`ஆசிட் தாக்குதலால்' பாதிக்கப்பட்ட +2 மாணவி `ஸ்கூல் ஃபர்ஸ்ட்' - இவரது கனவு என்ன த...
மின்னல் தாக்கி பசு உயிரிழப்பு
கொல்லிமலையில் மின்னல் தாக்கியதில் பசுமாடு புதன்கிழமை உயிரிழந்தது.
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் புதன்கிழமை மாலை 5 மணியளவில் பலத்த இடி, மின்னலுடன் மழை பெய்தது. அப்போது, திருப்புளிநாடு ஊராட்சி சுள்ளுக்குழிப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த ராஜேந்திரன் என்பவரது மாட்டுக்கொட்டகையில் கட்டப்பட்டிருந்த பசுமாடு மின்னல் தாக்கியதில் உயிரிழந்தது.
மேலும் ஒரு மாடுக்கு கண்பாா்வை பறிபோனது. மாவட்ட நிா்வாகம் நேரில் ஆய்வு செய்து இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனா்.