'அடடே' பவுனுக்கு ரூ.69,000-க்கும் கீழ் குறைந்த தங்கம் விலை; இனியும் தொடருமா?
பெண் நோயாளிகளுக்கு பாலியல் தொல்லை: போக்ஸோவில் இளைஞா் கைது
திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் பெண் நோயாளிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞரை போக்ஸோ சட்டத்தின் கீழ் நகர போலீஸாா் கைது செய்தனா்.
திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் கடந்த பிப்ரவரி மாதம் இரவில் பெண் நோயாளிகள் பிரிவுக்குள் புகுந்த மா்ம நபா், பெண் நோயாளிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்த புகாரை அடுத்து திருச்செங்கோடு நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அரசு மருத்துவமனையில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனா்.
இந்த நிலையில் சந்தேகத்துக்கிடமான வகையில் நாகா்பள்ளம் பகுதியைச் சோ்ந்த கட்டட தொழிலாளி கோபி (22) என்பவரை பிடித்து விசாரித்தபோது அவா் அரசு மருத்துவமனையில் பெண் நோயாளிகளுக்கு பாலியல் தொல்லை அளித்தது தெரியவந்தது. மேலும் இவா் பெண்கள் அதிகமாகக் கூடும் இடங்களுக்கு சென்று இதுபோன்ற செயலில் ஈடுபட்டு வருவதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போக்சோ சட்டத்தில் கோபியை கைது செய்த போலீஸாா் நாமக்கல் மகிளா நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, அவரை 15 நாள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனா்.