மனைவியின் கள்ளக்காதல் மாமியார் உள்பட 3 பேரை கொன்று கணவர் வெறிச்செயல்
காஸா மீதான இஸ்ரேல் தாக்குதலில் 22 குழந்தைகள் உள்பட 70 பேர் பலி!
காஸா மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 22 குழந்தைகள் உள்பட 70 பேர் உயிரிழந்துள்ளனர்.
இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே கடந்த 2023 அக்டோபர் முதல் போர் நடந்து வருகிறது. இடையில் போர் நிறுத்தம் அவ்வப்போது அறிவிக்கப்பட்டாலும் போர் தொடர்ந்து வருகிறது.
நேற்று(புதன்கிழமை) காஸா மீது இஸ்ரேல் ராணுவம் வான்வழித் தாக்குதலை மேற்கொண்டது. இந்த தாக்குதலில் 84 பேர் கொல்லப்பட்டதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எனினும் காஸா சுகாதாரத் துறை 22 குழந்தைகள் உள்பட 70 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவித்துள்ளது. ஜபாலியாவைச் சுற்றி கிட்டத்தட்ட 50 பேரும் தெற்கு நகரமான கான் யூனிஸில் 10 பேரும் கொல்லப்பட்டதாகக் கூறியுள்ளது.
ஹமாஸ் வசம் இருந்த இஸ்ரேல் - அமெரிக்க பிணைக் கைதி ஈடன் அலெக்ஸாண்டர் விடுவிக்கப்பட்ட சில மணி நேரங்களில் காஸா மீதான தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது.
கத்தார், எகிப்து, அமெரிக்கா ஆகிய நாடுகள் போர்நிறுத்தம் தொடர்பாக மறைமுகப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து வருகின்றன.
ஹமாஸை அழிக்கும் வரை இஸ்ரேல் தாக்குதலை யாரும் நிறுத்த முடியாது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேற்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | ஜம்மு-காஷ்மீரின் அவந்திபோரா பகுதியில் துப்பாக்கிச் சண்டை!