செய்திகள் :

Eye Health: கண்களில் வருகிற கட்டிக்கு நாமக்கட்டி உரசிப் பூசலாமா?

post image

ந்த வெயில் காலத்தில் சிலருக்கு அடிக்கடி கண்களில் கட்டி வரும். உள்ளங்கையில் விரலைத்தேய்த்து கட்டியின் மேல் வைப்பார்கள் அல்லது நாமக்கட்டியை உரசிப் பூசுவார்கள். இவையெல்லாம் தீர்வுகளா? கண்களில் வருகிற கட்டிக்கு என்ன தீர்வு? மதுரையைச் சேர்ந்த கண் மருத்துவர் அரவிந்த் சீனிவாசன் சொல்கிறார்.

கண்களில் வருகிற கட்டி
கண்களில் வருகிற கட்டி

“இமைப் பகுதியில் உள்ள சீபச் சுரப்பியில் ஏற்படும் அடைப்புகளின் காரணமாக கண்கட்டிகள் உருவாகின்றன. இமை முடிகள் முளைக்கும் இடங்களில் உள்ள ஜீஸ் எனும் சுரப்பியில் அடைப்பு ஏற்படுவதால், வெளிப்புறக் கண்கட்டிகள் உருவாகின்றன.

கண் இமையின் நடுப்பகுதியில் அமைந்துள்ள மெய்போமியன் சுரப்பியில் பிரச்னை ஏற்படுவதால், உட்புறத்திலும் சிலருக்கு கண்கட்டி ஏற்படும். பொதுவாக, வெளிப்புறக் கட்டிகளில் கிருமித்தொற்று ஏற்படுவதால், சீழ் பிடித்து அதிக வலியை ஏற்படுத்தும். உட்புறக் கட்டிகள் நாள்பட்டவையாக இருந்தாலும் வலி இருக்காது. சிலருக்குக் குறைவான வலி இருக்கும்.

கண்கட்டிக்கு எனப் பிரத்யேக மருந்துகள் உள்ளன. கண் மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று சொட்டு மருந்து, மாத்திரைகள், களிம்புகள் பயன்படுத்துவதன் மூலம் கண்கட்டிக்குத் தீர்வு காணலாம்.

காலை, மாலை இரண்டு வேளையும் ஐந்து நிமிடங்களுக்கு வெந்நீர் ஒத்தடம் தரலாம். கண்களைச் சுத்தமாக வைத்துக்கொள்வது நல்லது.

Eye drops
Eye drops

சர்க்கரை நோய் அதிகமாகவும் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாகவும் இருப்பவர்களுக்கு, கண் கட்டியாகத் தொடங்கி, பின்னர் இவை முகத்திலும் பரவ வாய்ப்புஉண்டு. எனவே, நாமக்கட்டியை பூசுவது போன்ற சுய வைத்தியம் செய்துகொள்ளாமல் உரிய மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது நல்லது'' என்கிறார் டாக்டர் அரவிந்த் சீனிவாசன்.

Doctor Vikatan: கோடைக்காலம் வந்தாலே கடுமையான நீர்க்கடுப்பு.. இயற்கை மருத்துவ சிகிச்சைகள் என்ன?

Doctor Vikatan: ஒவ்வொரு வருடமும் கோடைக்காலம் வந்தாலே எனக்கு கடுமையான நீர்க்கடுப்புபிரச்னை வந்துவிடும். மருத்துவரைப் பார்த்து ஆன்டிபயாட்டிக்எடுத்துக்கொண்டால்தான்மெதுவாக குணமாகும். அதிக அளவிலானஆன்டிபயாட... மேலும் பார்க்க