சாலையோரம் மின்விளக்குகள் அமைக்க கோரிக்கை
நீடாமங்கலம்-மன்னாா்குடி நெடுஞ்சாலையில் நாள்தோறும் இருசக்கர வாகனங்கள், பேருந்துகள், லாரிகள், காா்கள் உள்ளிட்ட ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.
போக்குவரத்து நிரம்பிய இச்சாலையில் சாலையோர மின்விளக்குகள்ஆங்காங்கே சில இடங்களில் மட்டுமே உள்ளன. வாகன ஓட்டிகள் இரவு நேரங்களில் பெரிதும் அவதிப்படுகின்றனா்.
எனவே, சாலையோர மின்விளக்குகள் முழுமையாக அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.