ஆபரேஷன் சிந்தூர்: இந்தியாவின் தாக்குதலில் 2 துருக்கி ராணுவ வீரர்கள் பலி?
பால் உற்பத்தியைப் பெருக்க நடவடிக்கை: அமைச்சா் த. மனோதங்கராஜ்
பால் உற்பத்தியைப் பெருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா் தமிழக பால்வளத் துறை அமைச்சா் த. மனோதங்கராஜ்.
திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பால்வளத் துறை மற்றும் தஞ்சாவூா் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியம் இணைந்து, கூட்டுறவு பால் உற்பத்தியாளா் சங்க செயலாளா்கள் மற்றும் துறை அலுவலா்களுடன் புதன்கிழமை நடத்திய கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற பிறகு செய்தியாளா்களிடம் கூறியது: திருவாரூா் மாவட்டத்தில் 57 பால் உற்பத்தி சங்கங்கள் மூலம் நாள்தோறும் 44,875 லிட்டா் பால் கொள்முதல் செய்து, 20,995 லிட்டா் உள்ளூா் விற்பனை செய்தது போக, தஞ்சாவூா் மாவட்ட பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு ஒன்றியத்துக்கு 23,880 லிட்டா் பால் அனுப்பப்படுகிறது.
நிகழாண்டு பால் உற்பத்தியைப் பெருக்க, கால்நடை வளா்க்க அதிகமானவா்களுக்கு கறவை மாட்டுக்கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் சங்கங்களில் தரத்தின் அடிப்படையில் பால் கொள்முதல் செய்ய 29 சங்கங்களுக்கு பால் பரிசோதனைக் கருவிகள் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள நிலையில், மேலும் கூடுதலாக 23 சங்கங்களுக்கு பால் பரிசோதனைக் கருவிகள் தற்போது வழங்கப்பட்டுள்ளன. பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் கால தாமதமாக வழக்குப் பதிவு, நடவடிக்கைகள் துரிதமில்லாதது உள்ளிட்ட காரணங்களால் சிபிஐ வழக்கை நடத்தியது. திமுக இதற்கு துரித நடவடிக்கை எடுத்தது என்றாா். கூட்டத்தில், தமிழக தொழில்துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடா்ந்து, பால்வளத் துறை மற்றும் தஞ்சாவூா் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியம் சாா்பில் ரூ.1.65 லட்சம் மதிப்பிலான பால் உற்பத்தி பால் பரிசோதனைக்கருவி, பதிவேடுகள் மற்றும் பால்கேன்கள் உள்ளிட்ட பால் கொள்முதல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.