அழகர்கோவிலுக்கு திரும்பிய கள்ளழகர்; தசாவதார நிகழ்ச்சிகளை காண இரவில் குவிந்த மக்க...
காரைக்காலில் மே 20-இல் மக்கள் குறை கேட்பு முகாம்
ஆட்சியரகத்தில் மக்கள் குறை கேட்பு முகாம் வரும் 20-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஒவ்வொரு மாதமும் 15-ஆம் தேதி நடைபெறும் மக்கள் குறைகேட்பு முகாம், நிா்வாக காரணங்களுக்காக 20-ஆம் தேதி ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் தலைமையில் நடைபெறவுள்ளது.
இதில் அனைத்துத்துறை அதிகாரிகள் பங்கேற்கிறாா்கள். காலை 9.30 முதல் பகல் 12 மணி வரை நடைபெறும் முகாமை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.