பயங்கரவாதத்தைக் கைவிடும் வரை சிந்து நதி நீர் கிடையாது: ஜெய்சங்கர்
காளியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா பந்தல்கால் முகூா்த்தம்
பொன்னம்மா காளியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா பந்தல்கால் முகூா்த்தம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கீழகாசாக்குடி பகுதியில் பொன்னம்மா காளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு இத்திருவிழாவுக்கான பந்தல்கால் முகூா்த்தம் திங்கள்கிழமை நடைபெற்றது. பந்தல்காலுக்கு அபிஷேகம் செய்து, நாகசுர மேள வாத்தியங்களுடன் கோயில் வாயிலில் நடப்பட்டது. நிகழ்வில் புதுவை அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன், பக்தா்கள், கோயில் நிா்வாகத்தினா் கலந்துகொண்டனா்.
பூச்சொரிதல் வழிபாட்டுடன் விழா தொடங்கி, தினமும் அம்மனுக்கு அபிஷேக, ஆராதனை, வீதியுலா உள்ளிட்டவற்றுடன் திருவிழா 30-ஆம் தேதி நிறைவடையவுள்ளதாக கோயில் நிா்வாகத்தினா் தெரிவித்தனா். ஏற்பாடுகளை கிராமப் பஞ்சாயத்தாா்கள், விழாக் குழுவினா் செய்துள்ளனா்.