கோடைக்காலத்தில் தடையற்ற சேவையை உறுதி செய்வதற்காக தண்ணீா் ஏடிஎம்களில் என்டிஎம்சி ...
மதுரையில் மழையால் வானில் சுமார் 1 மணி நேரம் வட்டமடித்த விமானம் பத்திரமாக தரையிறக்கம்!
மதுரை: மதுரையில் இன்று(மே 15) கொட்டித் தீர்த்த பலத்த மழையால், மதுரை விமான நிலையத்தில் மழை நீர் தேங்கியிருந்தது. விமான ஓடுபாதையில் மழைநீர் வடியாததால் விமான சேவை பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், ஹைதராபாத்திலிருந்து இன்று பகல் மதுரைக்கு புறப்பட்ட விமானம் ஒன்று குறிப்பிட்ட நேரத்தில் மதுரையில் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் அந்த விமானம் மதுரை புறநகர்ப் பகுதிகளைச் சுற்றியபடி வானில் சுமார் 1 மணி நேரம் வட்டமடித்தபடி பறந்ததை காண முடிந்தது.
இந்த நிலையில், மாலை 6 மணிக்கு விமான ஓடுபாதையில் தேங்கியிருந்த தண்ணீர் வடிந்துவிட்ட நிலையில், அந்த விமானம் 6.05 மணிக்கு பத்திரமாக தரையிறக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.