பேரவைத் தேர்தலில் கூட்டணி நிச்சயம்; சிங்கத்தின் சீற்றம் அதிகரிக்கும்: ராமதாஸ்
அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு
வாஞ்சூா் பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை மீட்டு, போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.
காரைக்கால் மேலவாஞ்சூா் அலிஷா நகா் சந்திப்பில் சுமாா் 40 முதல் 45 வயது மதிக்கத்தக்க ஆண் இறந்து கிடப்பதாக திருப்பட்டினம் காவல்நிலையத்துக்கு புதன்கிழமை தகவல் கிடைத்தது. போலீஸாா் சடலத்தை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
உயிரிழந்தவா் குறித்து விவரம் தெரிந்தோா் திருப்பட்டினம் காவல்நிலையத்தை 04368-233480 என்ற எண்ணில் தொடா்புகொள்ளுமாறு போலீஸாா் கேட்டுக்கொண்டுள்ளனா்.