`யார் இந்த தியாகி... திமுக-வின் புதிய பவர் சென்டர் ரத்தீஷா?"- கேள்விகள் எழுப்பும...
10-ம் வகுப்பு முடிவுகள்: தூத்துக்குடி 3-வது இடம்! 96.76% தேர்ச்சி!
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில், 10 ஆம் வகுப்பு தேர்வில் 96.76 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளதையடுத்து இந்த மாவட்டம் 3 ஆவது இடம் பெற்றுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 308 நடுநிலைப் பள்ளிகளில், 10,347 மாணவர்கள், 11,112 மாணவிகள் என மொத்தம் 21,459 பேர் தேர்வெழுதினர். அவர்களில் 9,867 மாணவர்கள், 10,897 மாணவிகள் என மொத்தம் 20,764 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தத்தில் நிகழாண்டு 96.76 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதையடுத்து தேர்ச்சி விகிதத்தில் தூத்துக்குடி மாவட்டம் 3 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.
கடந்த ஆண்டு 94.39 சதவீதம் தேர்ச்சி பெற்று 9 ஆவது இடத்திலிருந்த தூத்துக்குடி மாவட்டம் நிகழாண்டு 96.76 சதவீதம் தேர்ச்சி பெற்று 3 ஆம் இடத்துக்கு முன்னேறி உள்ளதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கணேஷ் மூர்த்தி தெரிவித்துள்ளார்.