செய்திகள் :

இந்தோனேசியா: கிளர்ச்சியாளர்கள் தாக்குதலில் 20 பேர் பலி

post image

இந்தோனேசியாவில் கிளர்ச்சியாளர்களின் தாக்குதலில் 20 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தோனேசியாவில் பப்புவா மாகாணத்தில் கிளர்ச்சியாளர்கள் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், புதன்கிழமையில் இன்டன் ஜயா பகுதியில், அப்பகுதி மக்களுக்கு சுகாதார மற்றும் கல்வி சேவைகளை வழங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர்.

தாக்குதலைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் 18 கிளர்ச்சியாளர்களும், 2 காவல் அதிகாரிகளும் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, 3 கிளர்ச்சியாளர்கள் மட்டுமே கொல்லப்பட்டதாகவும், மீதமுள்ளவர்கள் கிளர்ச்சியாளர்கள்போல வேடமிடப்பட்ட அப்பாவி பொதுமக்கள் என்றும் கூறுகின்றனர்.

இருப்பினும், அரசின் தரப்பில் எந்த உயிரிழப்புகளும் இல்லை என்று ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். இந்தோனேசியாவுடன் பண்டைய டச்சு காலனியான பப்புவா மாகாணத்தை இணைத்த காலத்தில் இருந்து, கிளர்ச்சியாளர்கள் போராடி வருகின்றனர்.

‘பட்டினிச் சாவு அபாயத்தில் 30 கோடி போ்’

உலகளவில் 29.53 போ் பட்டினிச் சாவை எதிா்நோக்கியுள்ளதாக ஐ.நா. உணவு பாதுகாப்பு அமைப்பு உள்ளிட்ட 16 தன்னாா்வல அமைப்புகள் இணைந்து வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘சா்வதேச உணவுப் பற்றாக... மேலும் பார்க்க

இந்தியா-பாகிஸ்தான் பகை நல்லதல்ல: டிரம்ப்

அண்டை நாடுகளான இந்தியா-பாகிஸ்தான் இடையே பகை அதிகரிப்பது நல்லதல்ல என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். ‘இவ்விரு நாடுகள் இடையிலான பதற்றத்தைத் தணிக்க நான் மத்தியஸ்தம் செய்தே... மேலும் பார்க்க

சமூக வலைதள ‘போலி செய்தியை’ நாடாளுமன்றத்தில் பேசிய பாகிஸ்தான் அமைச்சா்!

பிரிட்டனில் இருந்து வெளியாகும் ‘தி டெய்லி டெலிகிராஃப்’ நாளிதழில் பாகிஸ்தான் விமானப் படையைப் புகழ்ந்து கட்டுரை வெளியானதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சா் இஷாக் தாா் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்களிடம் கூறியத... மேலும் பார்க்க

எவரெஸ்ட் மலையேற்றம்: இந்தியர் உள்பட 2 வீரர்கள் பலி!

நேபாளத்தில் அமைந்துள்ள எவரெஸ்ட் மலையில் 2 வீரர்கள் மரணமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இமய மலைத்தொடர்களில் அமைந்துள்ள எவரெஸ்ட் மலையில் ஏறிய இந்தியா மற்றும் பிலிப்பின்ஸ் நாட்டைச் சேர்ந்த 2 வீரர்கள் ப... மேலும் பார்க்க

பாகிஸ்தான் அமைதியான நாடு; இந்தியாவுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளது: பிரதமர் ஷெபாஸ் ஷரீஃப்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ஒரு அமைதியான நாடு என்று அந்நாட்டின் பிரதமர் ஷெபாஸ் ஷரீஃப் இன்று(மே 16) பேசியிருக்கிறார்.பாகிஸ்தானில் ராணுவத்தில் சேவையாற்றி உயிர்நீத்த வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நாளான மே ... மேலும் பார்க்க

காஸாவில் தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்! ஒரே நாளில் 93 பேர் பலி!

காஸாவின் மீதான இஸ்ரேலின் தொடர் தாக்குதல்களினால் ஒரே நாளில் 93 பேர் பலியாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. காஸாவின் தெயிர் அல்-பலா மற்றும் கான்யூனிஸ் ஆகிய பகுதிகளின் மீது நேற்று (மே 15) நள்ளிரவு துவங்கிய இஸ்... மேலும் பார்க்க