பாதுகாப்புத் துறைக்கு ரூ.50,000 கோடி கூடுதல் ஒதுக்கீடு: மத்திய அரசு திட்டம்
துருக்கி ஆப்பிள் முதல் மார்பிள் வரை.. சரியும் இறக்குமதி! என்னவாகும் ஏற்றுமதி?
இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடும் பாகிஸ்தானுக்கு உதவும் துருக்கியை புறந்தள்ளுவோம் என்ற கோஷத்தின் அடிப்படையில், ஆப்பிள் முதல் மார்பிள் வரை 2.84 மில்லியன் டாலர் இறக்குமதி சரியும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தான் பயன்படுத்திய ட்ரோன்கள் அனைத்தும் துருக்கியில் தயாரிக்கப்பட்டவை என்று இந்தியா - பாகிஸ்தான் சண்டையின்போது, ராணுவ உயர் அதிகாரிகள் தெரிவித்திருந்த நிலையில், நேரடியாகவே பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவிப்பதாக துருக்கி அறிவித்துவிட்டது.
நாடுதான் முதலில் என்ற கோட்பாட்டின் அடிப்படையில், நாட்டின் பெரும் வணிகர்கள் பலரும், துருக்கியிலிருந்து இறக்குமதி செய்வதைத் தவிர்த்து வருகிறார்கள். அதில் முதலிடங்களில் ஆப்பிள், மார்பிள் உள்ளன.
ஏற்கனவே, துருக்கி மற்றும் அஜர்பைஜான் நாடுகளுக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டிருந்தவர்கள் தங்களது பயணத்தை ரத்து செய்து வருகிறார்கள்.
இதற்கிடையே, இந்தியா, துருக்கியிலிருந்து இறக்குமதி செய்வதைக் காட்டிலும் அதிகளவில் ஏற்றுமதியும் செய்து வருவதாகவும், கடந்த 2024 - 25 ஏப்ரல் - பிப்ரவரி காலக்கட்டத்தில் இந்தியாவின் ஏற்றுமதி 5.2 பில்லியன் டாலராக இருந்துள்ளது. இது ஒட்டுமொத்த ஏற்றுமதியில் 1.5 சதவீதமாகும்.
அதே காலக்கட்டத்தில் துருக்கியிலிருந்து இறக்குமதி செய்திருப்பது 2.84 பில்லியன் டாலர்கள். இது ஒட்டுமொத்த இறக்குமதியில் 0.5 சதவீதம்தான் என்கின்றன தரவுகள்.
இந்தியா, துருக்கிக்கு வாகன உதிரிபாகங்கள், இயந்திரங்கள், மருந்துகள், பருத்தி உள்ளிட்டவற்றை ஏற்றுமதி செய்கிறது. துருக்கியிலிருந்து எண்ணெய், தங்கம், மார்பிள், அப்பிள்கள், காய்கறிகள், சிமெண்ட், கெமிக்கல் பொருள்களை இறக்குமதி செய்கிறது. இந்தியாவுக்கு ஆப்பிள் வழங்கும் முக்கிய நாடுகளில் துருக்கி முதலிடத்தில் இருந்தது.
இறக்குமதி குறைந்து வரும் நிலையில், இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் பொருள்கள் குறித்து தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.