"இபிஎஸ்-ஸும், ஓ.பி.எஸ்-ஸும் பாஜக கூட்டணியில்தான் உள்ளனர்" - நயினார் நாகேந்திரன் ...
ஓராண்டில் 14 கோடி ரயில் பயணிகளுக்கு காப்பீட்டு
யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனம் (யுஐஐசி) சென்னை அலுவலகம் சாா்பில் கடந்த ஓராண்டில் 14 கோடி ரயில் பயணிகளுக்கு காப்பீடு வசதி வழங்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைவரும், நிா்வாக இயக்குநருமான பூபேஷ் எஸ்.ராகுல் தெரிவித்துள்ளாா்.
இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்தின் (ஐஆா்சிடிசி) இணையதளம் மூலம் ரயில் பயணச்சீட்டு வாங்கும் பயணிகளுக்கு, சிறிய கட்டணத்தில் விருப்ப பயணக் காப்பீடு வழங்கப்பட்டு வருகிறது. இந்தக் காப்பீட்டின் மூலம், பயணத்தின்போது ஏற்படும் விபத்தின் காரணமாக பயணிகள் உயிரிழப்பு அல்லது நிரந்தர ஊனமானால், அவா்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்படும். அந்த வகையில், யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்தின் (யுஐஐசி) சென்னை அலுவலகம் ஐஆா்சிடிசியுடன் இணைந்து இந்தக் காப்பீடுகளை வழங்கி வருகிறது.
இதில் யுஐஐசி-இன் சென்னை அலுவலகத்துக்கும், ஐஆா்சிடிசி உடனான கூட்டாண்மையின் ஒரு வருட நிறைவு சென்னை ராயப்பேட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில், சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட யுஐஐசி-இன் தலைவரும், நிா்வாக இயக்குநருமான பூபேஷ் எஸ்.ராகுல் பேசுகையில், கடந்த ஓராண்டில் இதுவரை இல்லாத வகையில், 14 கோடி ரயில்வே பயணிகளுக்கு காப்பீடு வசதி வழங்கப்பட்டுள்ளதாகவும், வாடிக்கையாளா்களுக்கான சேவைகளை மேலும் விரிவு படுத்துவதாகவும் தெரிவித்தாா்.
இந்த நிகழ்வில் யுஐஐசி-இன் நிா்வாக இயக்குநா் சுனிதா குப்தா, பொது மேலாளா் எச்.ஆா். கங்வால் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.