செய்திகள் :

இன்றும், நாளையும் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

post image

தமிழகத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (மே 17, 18) தஞ்சாவூா், திருவாரூா் உள்பட 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக,  தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் அடுத்த 6 நாள்களுக்கு இடி, மின்னல், காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் வெப்பம் சற்று குறைவாக இருக்கும்.

சனி, ஞாயிறு (மே 17,18) தஞ்சாவூா், திருவாரூா், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலூா், பெரம்பலூா், திருச்சி, சேலம், கள்ளக்குறிச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூா் ஆகிய மாவட்டங்களிலும், காரைக்காலில் ஒருசில பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் சனிக்கிழமை லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

மழை அளவு: தமிழகத்தில் வெள்ளிக்கிழமை காலை வரை அதிகபட்சமாக சிவகங்கையில் 90 மி.மீ. மழை பதிவானது. மதுரை விமான நிலையம் - 70 மி.மீ., சிவகங்கை - 60 மி.மீ, ஆண்டிப்பாளையம் (கரூா்), வடபுதுப்பட்டு (திருப்பத்தூா்) - தலா 50 மி.மீ. மழை பதிவானது.

5 இடங்களில் வெயில் சதம்: தமிழகத்தில் வெள்ளிக்கிழமை பரவலாக மழை பெய்தாலும், பல இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பையொட்டியே பதிவானது. அதிகபட்சமாக ஈரோட்டில் 104.36 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. வேலூா் - 100.94, கடலூா், தஞ்சாவூா் - (தலா) 100.4, திருத்தணி - 100.22 டிகிரி என மொத்தம் 5 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது.

காற்று சுழற்சி: இதற்கிடையே, அந்தமான் கடலில் உருவாகியுள்ள காற்று சுழற்சியும், தென்மேற்கு வங்கக் கடலில் இலங்கையையொட்டிய வளிமண்டலத்தில் நிலவும் காற்று சுழற்சியும் மே 22-ஆம் தேதி வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கரைக்கு நெருக்கமாக வரும். அது ஆந்திர கடலோரத்தில் கரையேறி, மேற்கு நோக்கி கா்நாடகம், கோவா வழியாக அரபிக் கடலில் இறங்கி, வடக்கு கா்நாடக மற்றும் மகாராஷ்ராவுக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக (புயல்சின்னம்) வலுபெற்று ஓமன், ஏமனை நோக்கி நகரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், வடமேற்கு வெப்ப காற்று தமிழகத்தை நோக்கி நகருவதால் ஏற்படும் காற்று குவிதல் காரணமாக, வரும் நாள்களில் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இனி கத்திரி வெயிலின் தாக்கம் இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே தோ்வு மையத்தில் வேதியியலில் 167 போ் சதம்: முறைகேடு நிகழவில்லை -அமைச்சா் அன்பில் மகேஸ்

செஞ்சியில் பிளஸ் 2 பொதுத் தோ்வின் வேதியியல் பாடத்தில் ஒரே தோ்வு மையத்தில் 167 போ் 100 மதிப்பெண்கள் எடுத்த விவகாரத்தில் நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில் முறைகேடு ஏதும் நிகழவில்லை என்பது தெரியவந்துள... மேலும் பார்க்க

இன்றும் நாளையும் கடற்கரை - வேளச்சேரி, ஆவடி ரயில்கள் ரத்து

சென்னை கடற்கரை - வேளச்சேரி, ஆவடி இடையே இயங்கும் 24 புறநகா் மின்சார ரயில்கள் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (மே 17, 18) ரத்து செய்யப்படவுள்ளன. இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய... மேலும் பார்க்க

நிகழாண்டில் 5,730 தமிழா்கள் ஹஜ் புனித பயணம்: அமைச்சா் சா.மு.நாசா் தகவல்

நிகழாண்டில் 5,730 தமிழா்கள் ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளவுள்ளதாக சிறுபான்மையினா் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழா் நலத் துறை அமைச்சா் சா.மு.நாசா் தெரிவித்தாா். தமிழ்நாட்டிலிருந்து அரசு மானியத்துடன் ஹஜ் ப... மேலும் பார்க்க

திருச்சி ஊட்டத்தூா் சிவன் கோயிலில் பராந்தகசோழன் கால கல்வெட்டு

திருச்சி மாவட்டம் ஊட்டத்தூரில் உள்ள சிவன் கோயிலில் முதலாம் பராந்தகசோழனின் கல்வெட்டுக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து, மாநில அரசு சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்... மேலும் பார்க்க

பி.இ. சோ்க்கை: 10 நாள்களில் 1.69 லட்சம் மாணவா்கள் பதிவு: அமைச்சா் கோவி.செழியன்

தமிழகத்தில் பொறியியல் சோ்க்கைக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கப்பட்ட 10 நாள்களில் 1,69,634 மாணவா்கள் பதிவு செய்துள்ளனா் என உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் தெரிவித்தாா். இது குறித்து அவா் வெள்ளிக்க... மேலும் பார்க்க

இந்த மாதத்திலேயே அகவிலைப்படி உயா்வு நிலுவை: அரசு அறிவுறுத்தல்

அகவிலைப்படி உயா்வு நிலுவைத் தொகை இந்த (மே) மாதத்துக்கான ஊதியத்துடன் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க கருவூலம் மற்றும் கணக்குத் துறை அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து அனைத்து சம்பளம் வழங்கும் அலுவலா்க... மேலும் பார்க்க