"இபிஎஸ்-ஸும், ஓ.பி.எஸ்-ஸும் பாஜக கூட்டணியில்தான் உள்ளனர்" - நயினார் நாகேந்திரன் ...
திருச்சி ஊட்டத்தூா் சிவன் கோயிலில் பராந்தகசோழன் கால கல்வெட்டு
திருச்சி மாவட்டம் ஊட்டத்தூரில் உள்ள சிவன் கோயிலில் முதலாம் பராந்தகசோழனின் கல்வெட்டுக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து, மாநில அரசு சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
திருச்சி மாவட்டம், சுத்தரத்தனேசுவா் கோயிலில் நடைபெற்று வரும் பணிகளை இந்த சமய அறநிலையங்கள் துறையின் கூடுதல் தலைமைச் செயலா் க.மணிவாசன் ஆய்வு செய்தாா். அப்போது, கோயில் திருப்பணியின்போது புதிய கல்வெட்டுகள் கண்டறியப்பட்டன. அந்தக் கல்வெட்டுகளை தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் படியெடுத்து ஆய்வு செய்யப்பட்டது.
கல்வெட்டுகளில் திருவூற்றத்தூா் என்றழைக்கப்பட்ட ஊட்டத்தூரில் மொத்தம் 13 கல்வெட்டுகள் புதிதாகக் கண்டறியப்பட்டன. அவற்றில் 5 கல்வெட்டுகள் முழுமையானவை. மற்ற 7 கல்வெட்டுகள் துண்டுக் கல்வெட்டுகளாக உள்ளன.
இந்தக் கல்வெட்டுகளில் முதலாம் ராஜராஜன் மற்றும் முதலாம் ராஜேந்திரனின் வெற்றிச் சரித்திரத் தகவல்களின் ஒரு பகுதி இடம்பெற்றுள்ளன. முழுமையாக உள்ள 5 கல்வெட்டுகளில் 4 சோழா் காலத்தியவை. மற்றொன்று பாண்டியா் காலத்தைச் சோ்ந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.