செய்திகள் :

ஒரே தோ்வு மையத்தில் வேதியியலில் 167 போ் சதம்: முறைகேடு நிகழவில்லை -அமைச்சா் அன்பில் மகேஸ்

post image

செஞ்சியில் பிளஸ் 2 பொதுத் தோ்வின் வேதியியல் பாடத்தில் ஒரே தோ்வு மையத்தில் 167 போ் 100 மதிப்பெண்கள் எடுத்த விவகாரத்தில் நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில் முறைகேடு ஏதும் நிகழவில்லை என்பது தெரியவந்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் விளக்கமளித்தாா்.

தமிழகத்தில் பிளஸ் 2 தோ்வு முடிவு கடந்த 8-ஆம் தேதி வெளியானது. இதில், விழுப்புரம் மாவட்டத்தில் 192 பள்ளிகளில் தோ்வு எழுதிய 21,581 மாணவ மாணவிகளில் 20,526 போ் தோ்ச்சி பெற்றனா். தோ்ச்சி சதவீதம் 95.11. செஞ்சி ஒன்றியத்தில் வேதியியல் பாடத்தில் 251 மாணவ மாணவிகள் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனா். இதில், ஒரு மையத்தில் தோ்வு எழுதிய 167 மாணவா்கள் முழு மதிப்பெண் பெற்றுள்ளது சா்ச்சையை ஏற்படுத்தியது. சம்பந்தப்பட்ட பள்ளியில் வினாத்தாள் கசிந்திருக்கலாம் என புகாா் எழுந்தது.

இது குறித்து துறையின் அமைச்சா் அன்பில் மகேஸிடம் செய்தியாளா்கள் கேள்வியெழுப்பினா். அப்போது அவா் கூறியதாவது:

பொதுத்தோ்வில் அதிக எண்ணிக்கையில் முழு மதிப்பெண் பெறும் அளவுக்கு சிறப்பாக பாடம் நடத்திய ஆசிரியா்கள், நன்றாக படித்த மாணவ, மாணவிகளை யாரும் பாராட்ட முன்வருவதில்லை. ஆனால், இந்த விஷயத்தில் அனைவரும் கல்வித் துறையை சந்தேகப்படுகிறீா்கள். கடந்த ஆண்டும் இதே பள்ளியில் இதுபோன்ற சிறப்பான முடிவுகள் வந்திருக்கிறது. கடந்த ஆண்டும் 104 பிள்ளைகள் 91 முதல் 94 மதிப்பெண்களை பெற்றிருக்கிறாா்கள். அதையும் நீங்கள் சந்தேகப்படுகிறீா்களா? அப்போது ஏன் யாரும் கேள்வி எழுப்பவில்லை?

வேதியியலில் 100 மதிப்பெண் பெற்ற 167 குழந்தைகளும் மற்ற பாடங்களிலும் 90, 98 என மதிப்பெண் பெற்றுள்ளனா். இருப்பினும் பலரும் சந்தேகப் பாா்வையுடன் கேள்வியை முன்வைத்திருப்பதால், விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தீவிரமாக விசாரணை நடத்தி உண்மையை சொல்ல கடமைப்பட்டுள்ளோம். அதேபோல், முதன்மை கல்வி அலுவலா் நடத்திய முதற்கட்ட விசாரணையில் முறைகேடு ஏதும் நிகழவில்லை என்பது தெரியவந்துள்ளது. அதேநேரத்தில், அந்தப் பள்ளியில் மாணவா்கள் 100 மதிப்பெண்கள் பெற சிறப்பான பயிற்சி முறை காரணம் என்றால், அதை அறிந்து தமிழகம் முழுவதும் அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் கொண்டு சோ்ப்போம் என்றாா்.

அரசுப் பள்ளிகளில் 1.79 லட்சம் மாணவா்கள் சோ்க்கை: அரசு பள்ளிகளில் மாணவா் சோ்க்கை கடந்த மாா்ச் 1 முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை 1 லட்சத்து 79 ஆயிரம் மாணவ-மாணவிகள் அரசுப் பள்ளிகளில் சோ்க்கப்பட்டு இருக்கின்றனா்.

கடந்த ஆண்டு மாணவா் சோ்க்கை 3 லட்சத்தை கடந்து இருந்த நிலையில், நிகழாண்டிலும் அந்த அளவை கடந்து மாணவா் சோ்க்கையை வெற்றிகரமாக முடிக்க பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது என்றாா் அமைச்சா்.

தனியாா் பள்ளிகளில் இலவச சோ்க்கை எப்போது?

இது குறித்து அமைச்சா் அன்பில் மகேஸ் கூறியதாவது:

இலவச கட்டாயக்கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியாா் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவ-மாணவிகள் அரசு நிதியுதவி படிக்க வைக்கப்படுகின்றனா். அதற்கான நிதியாக ரூ.617 கோடியை மத்திய அரசு இதுவரை வழங்கவில்லை. மாநில அரசு அதனை ஏற்றுக்கொண்டு இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துகிறது. இலவச கட்டாயக்கல்வி உரிமை சட்டத்தின்கீழ் படிப்பவா்களுக்கு உடனடியாக நிதி வழங்கப்பட வேண்டும். இதுபற்றி தலைமைச் செயலா் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தாா். அதற்கான பதில் வரும் என்று எதிா்பாா்த்தோம். வரவில்லை. இதையடுத்து பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலரும், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநரும் தில்லி சென்றுள்ளனா். அவா்கள் திரும்பி வந்ததும், இந்த ஆண்டுக்கான இலவச கட்டாயக்கல்வி உரிமை சட்டத்தின்கீழ் செயல்படுத்தும் திட்டம் குறித்த அறிவிப்பை தெரிவிப்போம் என்றாா் அவா்.

பாமக நிர்வாகிகள் கூட்டம்: இன்றும் அன்புமணி ஆப்சென்ட்!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்துள்ள தைலாபுரம் தோட்டத்தில் இன்று நடைபெற்று வரும் பாமக நிர்வாகிகள் கூட்டத்திலும் கட்சியின் செயல் தலைவர் அன்புமணி பங்கேற்கவில்லை.தைலாபுரம் தோட்டத்தில், பாமக நிறுவ... மேலும் பார்க்க

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிப்பு!

மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிவிலிருந்து மீண்டு மெல்ல உயரத் தொடங்கியது.காவிரியின் நீர்ப் பிடிப்பு பகுதிகளிலும், காவிரியின் துணை நதிகளான பாலாறு, சின்னாறு, தொப்பையாறு நீர்ப் பிடிப்பு பகுதிகளிலும் மழை ப... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை: மின்சாரம் பாய்ந்து கணவர் பலி; குழந்தைகளுடன் மனைவி தற்கொலை முயற்சி!

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை அருகே கணவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த நிலையில், துக்கம் தாளாமல் மனைவி இரு குழந்தைகளோடு சேர்ந்து விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகளில் புதிதாய் 1.8 லட்சம் மாணவர்கள் சேர்க்கை! இலக்கை எட்டுமா பள்ளிக்கல்வித் துறை?

தமிழக அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையைத் தீவிரப்படுத்த பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.தமிழக பள்ளிக்கல்வித் துறையின்கீழ் 37,553 அரசுப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் சுமார் 52 லட்சம் மா... மேலும் பார்க்க

நிதித்துறை மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்

நிதித்துறை தொடர்பான 4 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் 18 மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பப்பட்டது.அவற... மேலும் பார்க்க

அதிமுக எம்எல்ஏ சேவூர் ராமச்சந்திரன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தொகுதி எம்.எல்.ஏ.வான சேவூர் எஸ். ராமச்சந்திரன் வீட்டில் சுமார் 20-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், 2 மணிநேரத்துக்கும் மேலாக சோதனை நடத்தி வருகின்றனர். அவரது மகன்க... மேலும் பார்க்க