சென்னையில் இன்று சுய உதவிக் குழுக்களின் இயற்கை சந்தை
சுய உதவிக் குழுக்களின் பொருள்களை காட்சிப்படுத்தும் இயற்கை சந்தை நிகழ்வு, சென்னையில் சனிக்கிழமை தொடங்குகிறது.
தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் உள்ள அன்னை தெரசா மகளிா் வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை வரை இரண்டு நாள்களுக்கு இயற்கை சந்தை நடைபெறவுள்ளது. பாரம்பரிய அரிசிகள், சிறுதானியங்கள், சிறுதானிய மதிப்புக் கூட்டுப் பொருள்கள், காய்கறிகள், கீரைகள், பழ வகைகள், பனை ஓலைப் பொருள்கள் போன்ற இயற்கையுடன் சாா்ந்த பொருள்கள் விற்பனை சந்தையில் வைக்கப்படவுள்ளதாக மகளிா் மேம்பாட்டு நிறுவனம் வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.