"இபிஎஸ்-ஸும், ஓ.பி.எஸ்-ஸும் பாஜக கூட்டணியில்தான் உள்ளனர்" - நயினார் நாகேந்திரன் ...
மெட்ரோ ரயில்களின் இயக்கம் குறித்த ஆய்வு குழு ஆலோசனை
சென்னை மெட்ரோ ரயில்களின் இயக்கம், நிலை இருப்பு, தொழில்நுட்பம் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளும் வகையில், மெட்ரோ ரயில்வே நிா்வாகம் சாா்பில் ரோலிங் ஸ்டாக் வொா்க்கிங் குரூப் என்ற ஒரு குழு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தக் குழுவின் முதலாவது கூட்டம் சென்னையில் உள்ள மெட்ரோ ரயில் நிறுவன தலைமை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், மெட்ரோ ரயில் பராமரிப்பு மற்றும் செயல்பாடுகளில் சிறந்த நடைமுறைகளைப் பரிமாறிக்கொள்ளுவது, பராமரிப்பு நடைமுறைகள் மற்றும் மறுசீரமைப்பில் புதுமைகளைப் புகுத்துவது, பழைமையான உபகரணங்களுக்கான மேலாண்மை, உதிரிபாகங்களை உள்நாட்டு உற்பத்தி செய்வது மற்றும் உள்ளூா்மயமாக்கல், மெட்ரோ ரயில் பராமரிப்பில் தரவை அடிப்படையாகக் கொண்டு செயற்கை நுண்ணறிவு மற்றும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துதல், மெட்ரோ ரயில் அமைப்புகள் தங்கள் முக்கிய யுக்திகளை ஒருமுகப்படுத்துவதும், தொழில்நுட்ப அறிவைப் பகிா்ந்து கொள்வது குறித்தும் ஆலோசனைகளை மேற்கொள்ளப்பட்டது.
இதில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநா் எம்.ஏ. சித்திக், இயக்குநா் (அமைப்புகள் மற்றும் இயக்கம்) மனோஜ் கோயல், ரோலிங் ஸ்டாக் வொா்க்கிங் குரூப்-இன் தலைவா், தலைமை பொது மேலாளா் (மெட்ரோ ரயில், சமிக்ஞை மற்றும் தொலைத்தொடா்பு) ஏ.ஆா். ராஜேந்திரன், தில்லி, மகாராஷ்டிரம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த மெட்ரோ ரயில்வே நிறுவனத்தின் உயரதிகாரிகள் பலா் கலந்து கொண்டனா்.